பிரிவினைக்கு யார் காரணம்? பா.ஜ.,'வீடியோ'வால் பரபரப்பு!

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
புதுடில்லி:நாட்டின் பிரிவினைக்கு, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே காரணம் என்று கூறும், 'வீடியோ' ஒன்றை பா.ஜ., வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்றபோது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது. அந்தப் பிரிவினையின் போது, மக்கள் புலம்பெயர்ந்த போது நடந்த வன்முறைகள் உள்ளிட்டவற்றில் இரண்டு

புதுடில்லி:நாட்டின் பிரிவினைக்கு, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே காரணம் என்று கூறும், 'வீடியோ' ஒன்றை பா.ஜ., வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.latest tamil newsநாடு சுதந்திரம் பெற்றபோது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது. அந்தப் பிரிவினையின் போது, மக்கள் புலம்பெயர்ந்த போது நடந்த வன்முறைகள் உள்ளிட்டவற்றில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.'பிரிவினையின் கொடூர நினைவு தினமாக, ஆக., 14ம் தேதி அனுசரிக்கப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு அறிவித்தார். அதன்படி கொடூர நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.


ல்லைகள் நிர்ணயிப்பு


இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'பிரிவினையின்போது உயிரிழந்தோருக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன். அப்போது நடந்த கொடூரத்தை மனஉறுதியுடன் எதிர்கொண்டோரை பாராட்டுகிறேன்' என, மோடி குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, இது தொடர்பாக, பா.ஜ., சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் இருக்கும் காட்சிகள் உள்ளன.
அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டை பிரிக்க முடிவு செய்தபோது, சிரில் ஜான் ரெட்கிலிப் சில வாரங்களிலேயே எல்லைகளைநிர்ணயித்துள்ளார்.இந்திய கலாசாரம், பாரம்பரியம், வரலாறு, மக்களின் பழக்கவழக்கங்கள் தெரியாத அவர், பஞ்சாப் மற்றும் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியவர்கள் அப்போது எங்கேசென்றனர்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கொடூர சம்பவம்

வீடியோ முழுதும் பிரிவினைக்கு நேருவே காரணம் என்று குற்றஞ்சாட்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:வரலாற்றின் கொடூரமான சம்பவங்களை, தற்போதைய அரசியலுக்கான தீவனமாக பயன்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்கிறார். இவரை போன்ற நவீன சாவர்க்கர்கள், ஜின்னாக்கள், நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.


latest tamil newsஉண்மையில், நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பதை முதலில் கூறியது சாவர்க்கர். அதையே ஜின்னா பயன்படுத்தினார். அந்த நேரத்தில் பிரிவினையை நாம் ஏற்காமல் இருந்திருந்தால், நாடு பல துண்டுகளாக பிரிந்திருக்கும். இதை, சர்தார் வல்லபபாய் படேலும் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
15-ஆக-202214:47:41 IST Report Abuse
MARUTHU PANDIAR திலகர்,,நேதாஜி,, லஜபதி ராய், வ.உ.சி ,சாவர்க்கர் ,இவர்கள் போன்றோர் சிலர் சொன்ன படி சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனுக்கு "வலிக்காமல்"' அந்த முறையை பின் பற்ற வில்லை.++++++எனவே இவர்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப் பட்டு வாடினார்கள்++++ரத்தம் சிந்தினார்கள்.+++++சித்திரவதை அனுபவித்தார்கள்+++பிறக்கும்போதே வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறக்க வில்லை அவர்கள்+++++++
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
15-ஆக-202214:37:56 IST Report Abuse
MARUTHU PANDIAR தனக்கு வேண்டப் பட்ட ஷேக் அப்துல்லாவின் , மற்றும் முப்திகள் சுக போக வாழ்வுக்காக காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 ஜக் கொண்டு வந்து,,அதன் மூலம் மற்றவர்களின் உரிமைகள் முழுதும் பறிக்கப் பட்டது,,, மற்ற எவரும் நெருங்க முடியாத படிக்கு காஷ்மீரை பிரித்து வைத்தது,,,,மற்ற மாநிலங்களிலுள்ள மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு வாங்கும் பொருள்களை கிட்டத்தட்ட இலவசம் என்று சொல்லக் கூடிய பைசா கணக்கு விலையில் என்றென்றும் அடுத்தவர்கள் உழைப்பைச் சுரண்டி அவர்களுடைய மக்களுக்கு மானிய விலையில் கிடைக்க வழி வகுத்தது,,,அங்குள்ள பூர்விக குடிகளாகிய காஷ்மீர் இந்துக்கள் லட்சக் கணக்கில் கொடூரமாக கொலை செய்யப் பட்டது,, மாநிலத்தை விட்டே அகதிகளாக ஓட வைத்தது,,,பாரதத்தின் உண்மைக் கலாச்சாரம் மறைக்கப் படும் அளவுக்கு இஸ்லாமியர்களிடம் நாட்டின் மத்திய கல்வி மந்திரி பொறுப்பை அடுத்தடுத்து கொடுத்த்து,,,, நல்லெண்ண அடிப்படையில் இப்படி நேருவின் """தற்செயல்"" நடவடிக்கைகள் அனைத்து காரணமாக இருப்பதாக பாதிக்கப் பட்ட மக்கள் கூறுகிறார்களே?
Rate this:
Cancel
15-ஆக-202214:25:29 IST Report Abuse
kulandai kannan 1947 சுதந்திரத்திற்குப் பின் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் படுகொலை செய்யப்படும்போது, நேருவும், ஜின்னாவும் எங்கே போனார்கள்? அன்றைய ஆட்சியாளர்கள் என்ற முறையில் கிஞ்சித்தும் பொறுப்போ, வருத்தமோ தெரிவிக்காத நேருவையெல்லாம் என்னென்று சொல்வது??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X