முதல் தேசியக்கொடி தயாரித்த குடியாத்தம் வெங்கடாசலம்

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
வேலுார் : சுதந்திரம் பெற்றவுடன், டில்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறந்த, முதல் தேசியக்கொடி, குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது.இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் நாடு முழுதும் ஏற்ற, அதிகளவு தேசியக்கொடி தேவைப்பட்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்களில் 'ஆர்டர்' கோரப்பட்டது.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுாரை சேர்ந்த வெங்கடாசலம், 'இந்துஸ்தான்
முதல் தேசியக்கொடி, தயாரிப்பு, குடியாத்தம் வெங்கடாசலம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


வேலுார் : சுதந்திரம் பெற்றவுடன், டில்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறந்த, முதல் தேசியக்கொடி, குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் நாடு முழுதும் ஏற்ற, அதிகளவு தேசியக்கொடி தேவைப்பட்டது. இதற்காக பல்வேறு நிறுவனங்களில் 'ஆர்டர்' கோரப்பட்டது.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுாரை சேர்ந்த வெங்கடாசலம், 'இந்துஸ்தான் லுங்கி கம்பெனி' நடத்தி வந்தார்.


latest tamil news



இவர், 10 ஆண்டுகள் குடியாத்தம் நகராட்சி தலைவராக இருந்தார். அதிகளவு கைத்தறி துணியிலான தேசியக்கொடி தயாரித்து கொடுப்பதாக கடிதம் அனுப்பினார்.அப்போதைய சென்னை மாகாண அரசு அதிகாரிகள், குடியாத்தம் வந்து ஆய்வு செய்து அனுமதி அளித்தனர். இதையடுத்து ஆந்திரா மாநிலம், சித்துார் பிங்கலி வெங்கையா வடிவமைத்த, 12 அடி அகலம், 18 அடி நீளத்தில் கைத்தறி துணியிலான மூன்று தேசியக்கொடிகளை, வெங்கடாசலம் அவர் மனைவி முனிரத்தினம் ஆகியோர் தயாரித்து அனுப்பினர்.

அதில் ஒன்று, 1947 ஆகஸ்ட் 15ல் ‍டில்லி செங்கோட்டையிலும், மற்றொன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஏற்றப்பட்டன. மேலும், குடியாத்தம் நெசவாளர்களுடன் இணைந்து, இரண்டு கோடி தேசியக்கொடிகளை கைத்தறியில் தயாரித்து, நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பினர்.பிரதமராக பதவி ஏற்றதும், தேசியக்கொடியை தயாரித்த வெங்கடாசலத்தை பாராட்டி, நேரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை, அவரது குடும்பத்தினர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
15-ஆக-202212:04:32 IST Report Abuse
J. G. Muthuraj மூவர்ணம் என்பது பிரெஞ்சு புரட்சியிலிருந்து வந்ததாகும்.... அதாவது, சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் இவைகளை தழுவி இந்திய தேசிய கொடிக்கு முதலில் (1904) டிசைன் போட்டது ஸ்வாமி விவேகானந்தரின் சீடரான, அயர்லாந்தை சேர்ந்த சிஸ்டர் நிவேதிதா ஆவார்.. அந்த கொடியில் 'வந்தே மாதரம்' என்று வங்காள மொழியில் எழுதப்பட்டிருக்கும்.. பின்பு அன்னி பெசன்ட் அம்மையார் மற்றும் சாந்தி நிகேதனில் இருந்தவர்கள் நிறங்களை பற்றிய கருத்துக்களை காந்திக்கு அனுப்பி வைத்தார்கள்.. வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டது... சம்ஸ்கிருத அறிஞர்கள் சிவப்பை எடுத்து விட்டு காவிநிறத்தை சேர்க்க வலியுறுத்தினார்கள்.. 1931 ம் ஆண்டில் கொடிக்கென குழு அமைத்தது காங்கிரஸ் மன்றம்.. அதன் கன்வீனர் தேசியவாதி டாக்டர் பட்டாபி சீதாராமைய்யா ஆவார்... கருத்துக்கள் கேட்கப்பட்டன.. காந்தியவாதி பிங்கலி வெங்கையாவும், சூரய்யா தையாபிஜி என்ற பெண்மணியும் கொடிக்கு மெருகூட்டினார்கள்... இந்த பெண்மணிதான் அசோக சக்கரத்தை கொடியின் நடுவில் வைத்தது.. இந்திய அரசாங்கம் ஜூலை மாதம், 1947 ல் தான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து ஏற்றுக்கொண்டது... வந்தே மாதரம்....
Rate this:
Cancel
Tamil - Trichy,இந்தியா
15-ஆக-202209:12:14 IST Report Abuse
Tamil இந்திய தேசிய கொடியை யார் வடிவமைத்தார்கள் என்பதையும் சொல்லலாமே.
Rate this:
15-ஆக-202211:10:12 IST Report Abuse
ஆரூர் ரங்பிங்கலி வெங்கைய்யா எனும்🙏 தேசியவாதி ....
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஆக-202211:40:35 IST Report Abuse
Rafi 1921 ல் திரு பின்கலி வெங்கையா தயாரித்த தேசிய கொடி சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது, இப்போது நாம் பயன் படுத்தும் தேசிய கொடியை சுறையா தயாப்ஜி என்ற இஸ்லாமிய பெண்மணி வடிவமைத்தது. அது ஜூலை 17 - 22, 1947 ல் நடந்த காங்கிரஸ் காரியக்கமிட்டில் இறுதி ஒப்புதல் பெறப்பட்டு அதை தான் பயன் படுத்தி வருகின்றோம்....
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
15-ஆக-202208:53:25 IST Report Abuse
Sampath Kumar தேசிய கொடையை இவரு தயாரிக்க காரணமானவர் யாரு ? இந்த மொவர்ணக்கொடியை முதலில் வடிவு அமைபித்தவர் யாரு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X