பாதுகாப்பு அச்சுறுத்தல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: சர்பானந்தா

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : சென்னை துறைமுகத்தில் புதிய திட்டங்களை துவங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் அளித்த பேட்டி:சாகர்மாலா திட்டம், இந்திய துறைமுகங்களை நவீனமயமாக்கவும், துறைமுகங்களை விரிவாக்கம் செய்யவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 7,500 கி.மீ., துாரம் உள்ள கடலோர மாவட்டங்களை மேம்படுத்த, 567
பாதுகாப்பு அச்சுறுத்தல், மத்திய அரசு, நடவடிக்கை, சர்பானந்தா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : சென்னை துறைமுகத்தில் புதிய திட்டங்களை துவங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் அளித்த பேட்டி:

சாகர்மாலா திட்டம், இந்திய துறைமுகங்களை நவீனமயமாக்கவும், துறைமுகங்களை விரிவாக்கம் செய்யவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 7,500 கி.மீ., துாரம் உள்ள கடலோர மாவட்டங்களை மேம்படுத்த, 567 திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப ரீதியாக, இந்திய துறைமுகங்களை வலிமையாக்க, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


latest tamil news



சென்னை துறைமுகம் -- மதுரவாயில் இடையேயான ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.சீன உளவு கப்பலை இலங்கை அனுமதித்துள்ளதால், இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை தவிர்க்கும் நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா பகுதிகளில், இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை, அரசு துவங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-202206:06:09 IST Report Abuse
அப்புசாமி இவிங்க படையெடுப்பு தாங்க முடியலை. மத்திய அமைச்சர்கள் மாறி மாறி தமிழ்நாட்டுக்கு படையெடுக்குறாங்களே... மத்த மாநிலங்களுக்கும் செல்லுங்கப்பா...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஆக-202205:24:57 IST Report Abuse
Kasimani Baskaran தமிழகத்தில் தேசவிரோத திமுக ஆட்சியில் இருப்பதால் மிகக்கவனமாக கையாள வேண்டும். இலங்கை முதலீடுகளை என் ஐ ஏ வை வைத்து விசாரித்து சட்டவிரோத பண பரிமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X