அரிசி, கோதுமை, பால் மீதான ஜி.எஸ்.டி., திரும்பபெறக்கோரி மதுரையில் உண்ணாவிரதம்

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
திண்டுக்கல் : '' அரிசி, கோதுமை, பால், தயிர் போன்றவற்றிற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., அமல்படுத்தி உள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடக்கும் நாளன்று மதுரையில் உண்ணாவிரதம் நடத்தப்படும்,''என, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:மக்களுக்கு அத்யாவசியமான அரிசி, கோதுமை, பால், தயிர்
அரிசி, கோதுமை, பால் மீதான ஜி.எஸ்.டி., திரும்பபெறக்கோரி மதுரையில் உண்ணாவிரதம்


திண்டுக்கல் : '' அரிசி, கோதுமை, பால், தயிர் போன்றவற்றிற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., அமல்படுத்தி உள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடக்கும் நாளன்று மதுரையில் உண்ணாவிரதம் நடத்தப்படும்,''என, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:மக்களுக்கு அத்யாவசியமான அரிசி, கோதுமை, பால், தயிர் போன்றவற்றிற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., அமல்படுத்தி உள்ளனர். இதை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெறும் நாளன்று மதுரையில் உண்ணாவிரதம் நடத்த உள்ளோம்.

தமிழக அரசு 40 பொருட்களுக்கு அறிவித்துள்ள செஸ்வரி நீக்க வேண்டியும், 60 வயதிற்கு மேற்பட்டவணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், சிறிய வணிகர்களை நசுக்கும் பெரிய குழுமங்களை தடுக்க கோரியும் முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுக்க உள்ளோம். இந்தியாவில் அதிக வரி செலுத்தக்கூடிய மாநிலங்களில் முதல் மூன்றில் தமிழகமும் ஒன்று.ஜி.எஸ்.டி., அமல்படுத்தும் போது அது ரூ.ஒரு லட்சம் கோடி வந்ததும் ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் கூறினார்.

தற்போது ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி., வசூல் வந்தும் அது செயல்படுத்தவில்லை. டோல் கட்டணம், மின் கட்டணம், கட்டட வரி உயர்வு போன்றவை மக்களுக்கு சுமையாக அமையும். விலைவாசி உயர்விற்கும் வியாபாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை. இப்பிரச்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசவும் நேரம் கேட்டுள்ளோம்.கார்ப்பரேட் கம்பெனிகள் மத்திய அரசிற்கு அழுத்தம் தருவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். கருணாநிதி முதல்வராக இருந்த போது 750 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. கொரோனா காலத்திலும் சிறுவியாபாரிகள் மக்களுக்கு உதவி புரிந்தனர், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar - Mumbai,இந்தியா
15-ஆக-202214:07:27 IST Report Abuse
Shekar PTRPT. வீட்டு வாசலில் நின்று போராடினால் அர்த்தம் இருக்கும்
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
15-ஆக-202212:13:09 IST Report Abuse
Desi மே 2020 பிறகு ஆளை காணோமே?
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
15-ஆக-202208:20:26 IST Report Abuse
S.Ganesan பெட்ரோல் டீசல் விலையை இன்னும் தமிழக அரசு குறைக்கவில்லையே? அது பற்றி யாரும் வாயே திறக்கவில்லையே ? முதலில் அதற்கு போராடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X