எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
நியூயார்க் : அமெரிக்காவில் கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, 'வென்டிலேட்டர்' அகற்றப்பட்டது. பேசும் நிலைக்கு அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது.இந்தியாவில் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, 'த சட்டானிக் வெர்ஸஸ்' என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை
எழுத்தாளர், சல்மான் ருஷ்டி, உடல்நிலை முன்னேற்றம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneநியூயார்க் : அமெரிக்காவில் கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, 'வென்டிலேட்டர்' அகற்றப்பட்டது. பேசும் நிலைக்கு அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்தியாவில் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, 'த சட்டானிக் வெர்ஸஸ்' என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.இந்தப் புத்தகம் 1988ல் ஈரானில் தடை செய்யப்பட்டது. பின், பல இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. 'ருஷ்டியை கொன்றால், 26 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்' என ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா கொமேனி அப்போது அறிவித்திருந்தார்.


latest tamil newsஇதையடுத்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 10 ஆண்டுகள் போலீஸ் பாதுகாப்புடன் இருந்தார் ருஷ்டி; பிறகு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கடந்த 2000ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார்.இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சல்மான் ருஷ்டி பங்கேற்றார். அப்போது, நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஹாரி மட்டார், 24, என்பவர் மேடைக்குச் சென்று சல்மான் ருஷ்டியை கத்தி யால் சரமாரியாக குத்தினார்.


latest tamil newsகழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் பலமாக குத்தப்பட்டு இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட ருஷ்டி, அபாய கட்டத்தில் இருப்பதாகவும், பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறியிருந்தனர்.இந்நிலையில் நேற்று, ருஷ்டிக்கு பொருத்தப்பட்டு இருந்த வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டது. பேசும் நிலைக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே கண்காணிக்கப்பட்டு வருகிறார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஆக-202214:09:21 IST Report Abuse
Rafi கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பாக அதுவும் உண்மைத்தன்மையை விளங்கி கொள்ள முன்வராமல் பொது வெளியில் கருத்து வெளியிடுவது ஏற்புடையதில்லை. வரம்பு மீறி கருத்து தெரிவிப்பவர்கள் தன்னுடைய வாதத்தை மார்க்க அறிஞர்கள் மற்றும் பொதுவான அறிஞர்களை இணைத்து கொண்டு அவர்கள் முன் விவாதம் நடத்தி தெளிவு பெறலாம். இஸ்லாத்தில் ஒளிவு மறைவு கிடையாது, புரட்சி கருத்து என்று உண்மைக்கு மாறாக பேசுவதை எந்த மதத்தவர்களும் ஏற்க முன்வர மாட்டார்கள். அரசுகள் பாதுகாப்புக்காக வீண் விரயம் செய்வதற்கு மேல் முறையாக தீர்வு காண முன்வர வேண்டும்.
Rate this:
பேசும் தமிழன்ஒரு நபரின் கருத்து பிடிக்க வில்லை என்றால்.... ஒன்று கடந்து போகலாம் அல்லது நீங்கள் சொல்வது தவறு என்று சுட்டி காட்டலாம் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்....
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-ஆக-202212:40:57 IST Report Abuse
Rafi தனி நபரை பற்றிய விமர்சனம் கிடையாது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒன்று என்ற விகிதத்தில் இருக்கும் மதம் சார்ந்த பிரச்னை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அதை பற்றிய விளக்கம் தெரியாமல் பேசுவது எப்படி ஏற்புடையது. இங்கே இந்து மதத்தை பற்றி இந்து மதத்தை சேர்ந்தவர்களே இழிவாக பேசுகின்றார்கள் என்பதற்காக கடந்து போகிண்றீர்களா? அல்லது அவர்களை வசை மாறி பொழிகிண்றீர்களா என்பதை இந்த வலைத்தளம் சாட்சியாக இருந்து உணர்த்தும். இஸ்லாத்தில் நாவடக்கமும் ஒரு பங்கு....
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-ஆக-202213:16:49 IST Report Abuse
mindum vasantham இதை பற்றி கிறிஸ்டின் முஸ்லீம் கட்சியான dmk வாய் திறக்கவில்லை
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
15-ஆக-202212:08:07 IST Report Abuse
செல்வம் இவரு மூர்க்கமாக இனத்தில் பிறந்து இருந்தாலும் மிகுந்த அறிவு உள்ளவராக இறைவன் படைத்து விட்டான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X