தாக்குதல் திட்டம் முறியடிப்பு; மணிப்பூர், பஞ்சாபில் 11 பேர் கைது

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
இம்பால் : சுதந்திர தினத்தை முன்னிட்டு, பயங்கரவாதிகள் நடத்தவிருந்த தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக, மணிப்பூர் மற்றும் பஞ்சாபில் 11 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்பாலில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக 'அசாம் ரைபிள்ஸ்' படையினருக்கு நேற்று
தாக்குதல் திட்டம், முறியடிப்பு, மணிப்பூர், பஞ்சாப், 11 பேர் கைது,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


இம்பால் : சுதந்திர தினத்தை முன்னிட்டு, பயங்கரவாதிகள் நடத்தவிருந்த தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக, மணிப்பூர் மற்றும் பஞ்சாபில் 11 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்பாலில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக 'அசாம் ரைபிள்ஸ்' படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், தவுபால் மாவட்டத்தில் யெய்ரிபோக் பஜாரில் பதுங்கியிருந்த ஏழு பயங்கரவாதிகளை அசாம் ரைபிள்ஸ் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள், பிஸ்டல், பெரேட்டா துப்பாக்கி, தோட்டாக்கள், இரண்டு கையெறி குண்டுகள், தடை செய்யப்பட்ட சில புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப் பட்டன.


latest tamil news



அதேபோல், பஞ்சாபின் சண்டிகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்த திட்டமிட்டிருந்த மிகப்பெரிய தாக்குதல் திட்டத்தை புதுடில்லி போலீசாரின் உதவியுடன், மாநில போலீசார் முறியடித்தனர்.இது தொடர்பாக, நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலத்தில் ஹபிபுல் என்ற இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
15-ஆக-202214:35:03 IST Report Abuse
venkates சுட்டு தள்ளுங்கள்
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
15-ஆக-202214:19:49 IST Report Abuse
MARUTHU PANDIAR ஆங்கிலேயர்களிட மிருந்து மட்டுமே சுதந்திரம் அடைந்துள்ளோம்+++++இங்கேயே தங்கியுள்ள மிச்சமுள்ள எதிரிகளிடமிருந்தும்,, அவர்களின் கூட்டாளிகளான இத்தாலி மற்றும் தென் பகுதி பிரிவினைவாத எதிரிகளிடமிருந்தும் இன்னும் விடுதலை கிடைக்க வில்லையே? இப்போது அதற்குத் தான் பாடு பட வேண்டும்.
Rate this:
Cancel
Rama Chandran - chennai,இந்தியா
15-ஆக-202212:02:26 IST Report Abuse
Rama Chandran ஆளும் அரசியல் கட்சின் ஆதரவு இல்லாமல் பாக்கிஸ்தான்கள் நம் நாட்டுக்குள் நுழைய முடியாது. நம் அண்டை நாடான ஸ்ரீலங்கா நமக்கு உறவு நாடு ஆனால் எல்லை தாண்டி நம் நாட்டவர் உள்ளே வந்தால் சுட்டு வீழ்த்துகின்றனர் அல்லது கைது செய்கிறார்கள் ஆனால் நம் எதிரி நாடன பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மட்டும் எவ்வாறு உள்ளே நுழைகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X