தேசிய கல்வி கொள்கை கவர்னர் ரவி பெருமிதம்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை : 'தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான முன்னெடுப்பு. ஆரோக்கியமான, புத்திசாலியான குடிமக்களை உருவாக்கும்' என, கவர்னர் ரவி கூறியுள்ளார்.சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அவர் விடுத்துள்ள செய்தி:மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியா வளர்ச்சி அடைய, நம்
தேசிய கல்வி கொள்கை, கவர்னர் ரவி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : 'தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான முன்னெடுப்பு. ஆரோக்கியமான, புத்திசாலியான குடிமக்களை உருவாக்கும்' என, கவர்னர் ரவி கூறியுள்ளார்.சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அவர் விடுத்துள்ள செய்தி:மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியா வளர்ச்சி அடைய, நம் குடிமகன்களை நன்கு படித்தவர்களாக உருவாக்க வேண்டியது அவசியம். 'புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020' புரட்சிகரமான முன்னெடுப்பு. இது, ஆரோக்கியமான, புத்திசாலியான, விமர்சன சிந்தனை உள்ள அனுபவ படிப்பு மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக, நம் குடிமக்களை உருவாக்கும்.தமிழகம் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்று. நம் மாநிலத்தின் மனிதவள குறியீடு, நாட்டில் சிறந்ததாக உள்ளது.


latest tamil news



நாம் நமது பலம் மற்றும் பலவீனங்களை அறிய வேண்டும். பலவீனங்களை களைய, நம் பலத்தை பயன்படுத்த வேண்டும். மாநில அளவில் சீரான வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும். நம் மாநிலத்தில் தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க, தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், நம் அண்டை மாநிலங்களில் சில, நம் மாநிலத்தை விட பல மடங்கு முதலீடுகளை ஈர்க்கிறது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்து, அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மாற்ற வேண்டும்.இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-ஆக-202217:40:34 IST Report Abuse
S.Baliah Seer கோச்சிங் சென்டர்களைத் தடைசெய்யாமல் தேசிய கல்விக் கொள்கைப் பற்றி பேசுவது ஏமாற்று வேலை.
Rate this:
Suri - Chennai,இந்தியா
15-ஆக-202218:25:07 IST Report Abuse
Suriபுதுசா இப்போ CUET.........
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
15-ஆக-202213:48:02 IST Report Abuse
மனிதன் தேசிய கல்விக்கொள்கை.., வரலாறுகள் திரிக்கப்பட்டு சிந்திக்க முடியாத ஒரு சமுதாயத்தை உருவாக்கும்..
Rate this:
Cancel
15-ஆக-202212:22:41 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் டாப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஓட்டு மொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுள்ளது. இதில் தமிழக கல்லூரிகள் முக்கிய இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகளில் டாப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. > ஓட்டு மொத்த தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 18 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. > பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 21 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. > கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 32 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. > ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 10 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. > பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 16 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. > மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. > பார்மலஸி தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. > மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. > பல் மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 9 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. > சட்ட கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 30 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. > கட்டிடக் கலை கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 30 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 6 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.. நீங்க வேறு மாநிலம் சென்று படிப்பை பற்றி பேசுங்க , எங்களை அடையவே வடகங்களுக்கு இன்னும் 20 வருடம் தேவை
Rate this:
15-ஆக-202213:24:37 IST Report Abuse
ஆரூர் ரங்47000 பேர் தாய் மொழியில் ஃபெயில். அது விட்டுப் பூடுச்சு. நோபல் பரிசை ஒரு திராவிடனும் வாங்க முடியவில்லை 🤑 டாஸ்மாக் mகே கதி...
Rate this:
Suri - Chennai,இந்தியா
15-ஆக-202218:27:35 IST Report Abuse
Suriஹந்தியில் உத்தரபிரதேசத்தில் தோல்வி எண்ணிக்கை லட்சக்கணக்கில் என்பது தெரியுமா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X