இது உங்கள் இடம்: புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும்!

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்எஸ்.மன்னர்மலை மணி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம், 18 ம் தேதி துவங்கியது. இம்மாதம், 12ம் தேதி வரை இரு சபைகளையும் நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இரண்டு வேலை நாட்களுக்கு முன்னதாகவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பார்லி., நடக்கும் என
பார்லிமென்ட், மழைக்கால கூட்டத்தொடர், எதிர் கட்சிகள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்எஸ்.மன்னர்மலை மணி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம், 18 ம் தேதி துவங்கியது. இம்மாதம், 12ம் தேதி வரை இரு சபைகளையும் நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இரண்டு வேலை நாட்களுக்கு முன்னதாகவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பார்லி., நடக்கும் என அறிவிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இது ஏழாவது முறை.

எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே நிலவிய முரண்பாடு மற்றும் கூச்சல் குழப்பம் காரணமாக, சபைகள் சரியாக நடைபெறவில்லை. அதனால், மேலும் இரு நாட்களை வீணடிப்பதை விட, ஒத்திவைப்பதே சிறந்தது என, இரு சபைகளின் தலைவர்களும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.இருந்தாலும், முந்தைய சில கூட்டதொடர் போல, இந்த கூட்டத்தொடரானது, அமளி காரணமாக முழுமையாக வீணடிக்கப்படவில்லை.


latest tamil newsலோக்சபாவில் ஏழு மசோதாக்களும், ராஜ்யசபாவில் ஐந்து மசோதாக்களும் நிறைவேறி உள்ளன. அத்துடன், மற்றொரு சர்ச்சைக்குரிய மசோதாவான, மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதாக, எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்ட, மின் திருத்த மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

'விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும்' எனக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாலும், அதற்கு ஆளும் கட்சி தரப்பு சம்மதிக்காததாலும், கூட்டத்தொடர் துவங்கிய முதல் இரண்டு வாரங்களில், இரு சபைகளிலும், பெரும்பாலான நேரங்கள் வீணடிக்கப்பட்டன. அதேநேரத்தில், சபைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நிகழ்வு, இந்தக் கூட்டத்தொடரில் நடந்தது முக்கியமானது.

முந்தைய சில கூட்டதொடர்களை ஒப்பிடுகையில், பார்லி., நடக்கும் என நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், 40 முதல், 50சதவீதம், இரு சபைகளும் செயல்பட்டது திருப்தி அளிப்பதாக உள்ளது; ஆனாலும், மீதமுள்ள நேரம் வீணடிக்கப்பட்டது கவலை தரும் அம்சமே. பார்லிமென்ட் கூட்டத்தொடர் என்றாலே, அது, எதிர்க்கட்சிகள் அமளி செய்வதற்கான தருணம் மற்றும் இடம் என்ற நிலைமை, ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் நீடிக்கிறது. இதனால், ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற முடியாமல் போவதோடு, பல கோடி ரூபாய் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது.

மேலும், அமளி மற்றும் கூச்சல் குழப்பங்களுக்கு, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டுவதும் நீடிக்கிறது. எத்தனையோ விஷயங்களில் மாற்றங்கள் நிகழும் போது, அமளி இல்லாமல், பார்லிமென்ட் நடக்கும் வகையிலும், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த புதிய விடியலை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம். இந்தப் பிரச்னையில், எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sugumar s - CHENNAI,இந்தியா
15-ஆக-202221:29:11 IST Report Abuse
sugumar s It is the fault of us ( people ) to elect wrong people. They are be with their basic characteristics which is troublesome and non-cooperation. So only people are to be blamed for that. Atleast now we people should realise who is to be elected.
Rate this:
Cancel
15-ஆக-202213:40:14 IST Report Abuse
SUBBU,MADURAI இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பிராமணர்களின் பங்கு என்ன என்று நான் சொன்னால்?
Rate this:
Cancel
15-ஆக-202212:51:59 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் "அவர் இந்த சமூகத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை", என்று சொல்லி இருக்கிறாய்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X