15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிப்பு

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வரின் சிறப்பு பதக்கங்கள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.பொது மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு, சீரிய பணியாற்றியவர்களுக்கு, சுதந்திர தின விழாவையொட்டி, சிறந்த பொது சேவைக்கான, முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும். அந்த வகையில், சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்
15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிப்பு


சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வரின் சிறப்பு பதக்கங்கள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.பொது மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு, சீரிய பணியாற்றியவர்களுக்கு, சுதந்திர தின விழாவையொட்டி, சிறந்த பொது சேவைக்கான, முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.

அந்த வகையில், சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ஆனந்த் சின்ஹா; கடலுார் குற்றப் புலனாய்வுத் துறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கார்; சென்னை, அடையாறு போக்குவரத்து காவல் நிலையம், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சிவராமன்; மதுரை மதிச்சியம் போக்குவரத்து சப் - இன்ஸ்பெக்டர் பழனியாண்டி; தாம்பரம், செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான, முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள் பெறுவோர், ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடை தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பின்னர் நடக்கும் விழாவில், முதல்வரால் இந்த விருதுகள் வழங்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
15-ஆக-202218:37:11 IST Report Abuse
Girija இவர்கள் லஞ்ச வழக்கில் சிக்கி தண்டனை பெற்றால் திரும்ப வசூலிக்க சட்டம் வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X