டிரான்ஸ்பார்மர்களில் மீட்டர்: விரைவில் பணி துவக்கம்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : மின் இழப்பை தடுக்க, 3.76 லட்சம் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் மீட்டர்கள் பொருத்தும் பணிகளை, தமிழக மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது.தமிழக மின் வாரியம், துணை மின் நிலையங்களில் இருந்து, 'பீடர்' எனப்படும் மின் வழித்தடங்களில் மின்சாரத்தை அனுப்பி, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்கிறது. அதில்,
டிரான்ஸ்பார்மர், மின் மீட்டர், மின்வாரியம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : மின் இழப்பை தடுக்க, 3.76 லட்சம் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் மீட்டர்கள் பொருத்தும் பணிகளை, தமிழக மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது.தமிழக மின் வாரியம், துணை மின் நிலையங்களில் இருந்து, 'பீடர்' எனப்படும் மின் வழித்தடங்களில் மின்சாரத்தை அனுப்பி, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்கிறது.


latest tamil news




அதில், டிரான்ஸ்பார்மர் அதிக திறனில் வரும் மின்சாரத்தின் திறனை, குறைத்து சீராக வினியோகிக்க பயன்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் மின் தேவையை பொறுத்து, பல்வேறு திறன்களில் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து, 20 முதல், 50 வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது மின் இழப்பு ஏற்படுகிறது. இதனால், மின் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, மின் இழப்பை தடுக்க, புதிதாக அமைக்கப்படும் டிரான்ஸ்பார்மர்களில் மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. இதன் வாயிலாக, ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரிலும் எவ்வளவு மின்சாரம் சென்றது; எந்த நேரத்தில் அதன் முழு திறனுக்கு மின்சாரம் சென்றது போன்ற விபரங்களை துல்லியமாக கணக்கெடுக்க முடியும்.

இதனால், மின் இழப்பை தடுக்க, மின் தேவை அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் நிறுவுவது உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம். தற்போது, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, 3.76 லட்சம் டிரான்ஸ்பார்மர்களில் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பணிகளை, மின் வாரியம் விரைவில் முழுவீச்சில் மேற்கொள்ள திட்டமிட்டுஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marcopolo - Chennai,இந்தியா
15-ஆக-202207:02:00 IST Report Abuse
Marcopolo வரவேற்கிறோம். ஆனால் மின்சாரத்தை திருடும் மக்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு உபயோகிக்கும் மின்சாரத்திற்கும் யார் பணம் கட்டுவார்கள்?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
15-ஆக-202206:36:34 IST Report Abuse
duruvasar இதைத்தான்ய்ய மத்திய அரசு செய்ய சொன்னது. மின்கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லையே.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஆக-202206:16:50 IST Report Abuse
Mani . V அரசியல்வாதிகள் நடத்தும் மாநாடு, கூட்டங்களுக்கு செய்யும் மின்சார திருட்டை தடுக்க திராணியில்லை (எது திருடுவதே அவுங்கதானா?). இதில் டிரான்ஸ்பார்மர்களுக்கு மீட்டராம். அதாவது கொள்ளையடிக்க இது ஒரு புது யுத்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X