ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு நீர்நிலைகளுக்கு சர்வதேச அங்கீகாரம்| Dinamalar

ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு நீர்நிலைகளுக்கு சர்வதேச அங்கீகாரம்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | |
சென்னை : தமிழகத்தில் மேலும் நான்கு பறவைகள் சரணாலயங்கள், சர்வதேச அளவிலான, 'ராம்சார்' பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால், 'ராம்சார்' பட்டியலில் இடம்பெற்ற தமிழக நீர் நிலைகளின் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது.உலக அளவில் சதுப்பு நிலங்கள் பாதுகாப்புக்காக, 1971ல் ஈரான் நாட்டின், 'ராம்சார்' நகரில் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட உடன்பாடு அடிப்படையில்,
ராமநாதபுரம், நான்கு நீர்நிலைகள், சர்வதேச அங்கீகாரம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில் மேலும் நான்கு பறவைகள் சரணாலயங்கள், சர்வதேச அளவிலான, 'ராம்சார்' பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால், 'ராம்சார்' பட்டியலில் இடம்பெற்ற தமிழக நீர் நிலைகளின் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது.உலக அளவில் சதுப்பு நிலங்கள் பாதுகாப்புக்காக, 1971ல் ஈரான் நாட்டின், 'ராம்சார்' நகரில் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட உடன்பாடு அடிப்படையில், சதுப்பு நிலங்களை அங்கீகரிக்கும் வகையில், ராம்சார் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயம் மட்டுமே, ராம்சார் பட்டியலில் பல ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெற்றது. மீதம் உள்ள, பறவைகள் சரணாலயங்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக வனத் துறை முடுக்கி விட்டது.


latest tamil news14 இடங்கள்


சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கடலுார் மாவட்டம் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் ஆகிய மூன்று இடங்கள், கடந்த மாதம் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டன.இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல், திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம், மன்னார் வளைகுடா உயிர்சூழல் மண்டலம், கன்னியாகுமரி மாவட்டம் வேம்பனுார், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு, திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் ஆகிய ஆறு பறவைகள் சரணாலயங்கள், ராம்சார் பட்டியலில் சில நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, கூடுதல் பரிசு போன்று, ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி, கஞ்சிரான்குளம், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேரூர், திருவாரூர் மாவட்டம் வடுவூர் ஆகிய பறவைகள் சரணாலயங்கள், ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நீர் நிலைகளின் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது.
சித்திரங்குடி


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகில், 643 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, சித்திரங்குடி பறவைகள் சரணாலயம். 1989ல் இப்பகுதி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தமிழக வனத் துறையால், இப்பகுதி பறவைகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.கஞ்சிரான்குளம்


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் பகுதியில், 239 ஏக்கர் பரப்பளவில், கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. மஞ்சள் மூக்கு நாரை, கருந்தலை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள், இங்கு வந்து செல்கின்றன.சுசீந்திரம் - தேரூர்


கன்னியாகுமரி மாவட்டத்தில், 232 ஏக்கரில், சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. தனித்தனி குளங்கள் அமைந்துள்ள இப்பகுதியை தேடி, ஆயிரக்கணக்கான வலசை பறவைகள் வருகின்றன. இதன் அருகிலுள்ள வேம்பனுார் குளம், சமீபத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.வடுவூர்


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில், 276 ஏக்கர் பரப்பளவில், வடுவூர் வறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 1999ல் இப்பகுதி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. நவ., முதல் ஏப்., வரையிலான மாதங்களில், 40க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த, 20 ஆயிரம் பறவைகள், இங்கு வந்து செல்கின்றன.வனத்துறை அசத்தல்


இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முன்பு எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில், 14 பறவைகள் சரணாலயங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. இதன் வாயிலாக, இந்த இடங்கள் சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது, இப்பகுதிகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்து செல்லவும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X