சுருளி அருவியில் தொடரும் தடை; சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்| Dinamalar

சுருளி அருவியில் தொடரும் தடை; சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

Added : ஆக 15, 2022 | |
கம்பம், : தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்த போதும் குளிக்க அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆக. 2 முதல் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. வெள்ளப்பெருக்கு குறைந்த போதும் தண்ணீரில் கற்கள்
சுருளி அருவியில் தொடரும் தடை;  சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்


கம்பம், : தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்த போதும் குளிக்க அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆக. 2 முதல் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது.



வெள்ளப்பெருக்கு குறைந்த போதும் தண்ணீரில் கற்கள் விழுவதாக கூறி நேற்று 13வது நாளாக தடை தொடர்ந்தது. இதையறிந்த தேனிமாவட்டத்தினர் அருவிக்கு குளிக்க வருவதை தவிர்க்கின்றனர். வெளிமாவட்ட சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு வந்தபின்னரே தகவல் தெரிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X