அரசியலுக்கு முழுக்கு போட்ட அதிகாரிக்கு மீண்டும் பணி

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியை உதறிவிட்டு அரசியலுக்கு சென்ற அதிகாரி, மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதை அடுத்து, சுற்றுலா துறையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் ஷா பைசல். காஷ்மீர் கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், 2019ல் பணியை ராஜினாமா செய்தார்.ஜம்மு - காஷ்மீர் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை துவக்கிய அவர், ஜம்மு -
ஜம்மு காஷ்மீர், ஷா பைசல் ஐஏஎஸ்,  அரசியல் கட்சி, JandK, Shah Faisal IAS, Political Party, Arasiyal, Jammu and Kashmir,



புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியை உதறிவிட்டு அரசியலுக்கு சென்ற அதிகாரி, மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதை அடுத்து, சுற்றுலா துறையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் ஷா பைசல். காஷ்மீர் கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், 2019ல் பணியை ராஜினாமா செய்தார்.

ஜம்மு - காஷ்மீர் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை துவக்கிய அவர், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியில் வந்த பின், அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். 'பல ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றி சேர்த்து வைத்திருந்த நற்பெயர், புகழ், பணி ஆகிய அனைத்தையும் அரசியலால் இழந்து விட்டேன்' என, அவர் தெரிவித்திருந்தார்.

இதன்பின் மீண்டும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்ற அனுமதிக்கும்படி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று, மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் துணைச் செயலராக பைசலை நியமிப்பதாக, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
15-ஆக-202216:37:39 IST Report Abuse
Krishnamurthy Venkatesan மத்திய அரசு செய்யும் இமாலய தவறு. மத்திய அரசின் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து எதிர்த்து பணியை விட்டு விலகியது மட்டுமல்லாமல் தனி கட்சி ஆரம்பித்து உள்ளார். இவரை மீண்டும் பணியில் சேர்த்து தவறான முன்னுதாரணம்.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
15-ஆக-202211:53:57 IST Report Abuse
தஞ்சை மன்னர் நம்ம ஊரில் ஐ ஏ எஸ் அதிகாரி ஒரு தேசவிரோத கட்சியில் இணைத்து ஆட்டு குட்டி என்று பெயர் எடுத்து உள்ளார்
Rate this:
raja - Cotonou,பெனின்
15-ஆக-202215:18:51 IST Report Abuse
rajaகொத்தடிமை பண்ணி குட்டியே தேச விரோத கட்சிகளுடன்தான் திராவிட கூட்டணி வைத்திருக்கிறான்........
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-ஆக-202210:03:03 IST Report Abuse
அசோக்ராஜ் பக்தர்கள் புதுசா ஏதானும் கம்பி கட்டணுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X