தொடர் விடுமுறை எதிரொலி: மூணாறில் குவிந்த பயணிகள்

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மூணாறு : கேரளா, மூணாறில் இரண்டு மாத இடைவெளிக்கு பின் தொடர் விடுமுறையில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். அவர்கள் வந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறில் கொரோனாவுக்கு பின் கடந்த ஏப்ரல், மே கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. அதன்பின் மே 31ல் தென்மேற்கு பருவமழை
சுற்றுலாப்பயணிகள், மூணாறு சுற்றுலா, தென்மேற்கு பருவமழை , Munnar Tourism, South West Monsoon,


மூணாறு : கேரளா, மூணாறில் இரண்டு மாத இடைவெளிக்கு பின் தொடர் விடுமுறையில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். அவர்கள் வந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறில் கொரோனாவுக்கு பின் கடந்த ஏப்ரல், மே கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.

அதன்பின் மே 31ல் தென்மேற்கு பருவமழை துவங்கியதால் பயணிகள் வருகை குறைந்தது. ஜூலையில் மழை வலுவடைந்த நிலையில் ஜூலை 31 முதல் பத்து நாட்கள் கொட்டித் தீர்த்தது. அதனால் முன்னெச்சரிக்கை தொடர்பாக அலெர்ட்டுகள் விடுக்கப்பட்டு சுற்றுலா பகுதிகளும் மூடப்பட்டன. மழை குறைந்து சுற்றுலா பகுதிகள் ஆக. 12ல் திறக்கப்பட்டு இருநாட்களாக வெயிலுடன் இதமான காலநிலை நிலவியது.இந்நிலையில் சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் இன்று சுதந்திர தினம் என தொடர் விடுமுறையை முன்னிட்டு இரண்டு மாத இடைவெளிக்கு பின் இங்கு நேற்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தது.

அதனால் கொச்சி- - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட், மாட்டுபட்டி, எக்கோ பாய்ன்ட் உட்பட பல்வேறு சுற்றுலாப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அதில் சிக்கிய பயணிகள் திட்டமிட்டபடி சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
15-ஆக-202206:12:07 IST Report Abuse
duruvasar தேனி, மதுரை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மூலம் தமிழக வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கும். ஸ்டாலினின் போதை ஒழிப்பு அறைகூவலுக்கு கிடைத்த முதல் வெற்றி என கூறலாம். திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X