அடிக்கடி தாவும் 'சர்வகட்சி' சரவணன்: அரசியலில் 'யூ டர்ன்' இவருக்கு சாதாரணம்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (71) | |
Advertisement
மதுரை : 'அரசியலில் அடிக்கடி 'யூ டர்ன்' அடித்து கட்சி தாவும் சரவணன் பா.ஜ.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவ முயல்வது மூலம் 'சர்வகட்சி சரவணன்' ஆக மாறி விட்டார்' என மதுரை அரசியல்வாதிகள் கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மரியாதை
Saravanan, BJP, DMK, PTR, Slipper hurled

மதுரை : 'அரசியலில் அடிக்கடி 'யூ டர்ன்' அடித்து கட்சி தாவும் சரவணன் பா.ஜ.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவ முயல்வது மூலம் 'சர்வகட்சி சரவணன்' ஆக மாறி விட்டார்' என மதுரை அரசியல்வாதிகள் கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்தபோது, அமைச்சர் தியாகராஜன் ஒருமையில் பேசியதாகக் கூறி பா.ஜ.,வினர் திடீர் போராட்டம் நடத்தினர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரது காரில் செருப்பு வீசப்பட்டது.

இது தொடர்பாக "அமைச்சர் மரியாதை குறைவாக நடந்துகொண்டார். மதுரைக்கு வந்த கேடு இவர். தமிழ் தெரியாத அமைச்சர் தரம்தாழ்ந்து பேசுகிறார். பா.ஜ.,வினரை கண்ணியக்குறைவாக திட்டியது கண்டிக்கத்தக்கது. அமைச்சர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து அதே தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா... அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் எந்த நிகழ்ச்சியிலும் அவரை பங்கேற்க விடமாட்டோம்" என மாலையில் பேட்டியளித்து வீராவேசம் காட்டினார் சரவணன்.

அன்று இரவே அமைச்சரை அவரது வீட்டிற்கு போய் சந்தித்தார். 'எனக்கு துாக்கம் வரவில்லை. அவர் வீட்டில் நான் வளர்ந்தேன். எனவே மன்னிப்பு கேட்க வந்தேன்' என 'படுத்தே விட்டானய்யா...' என வடிவேல் படவசன பாணியில் பேட்டியளித்தார். முதலில் ம.தி.மு.க., பின்னர் தி.மு.க., அடுத்து பா.ஜ., மீண்டும் தி.மு.க., என ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கும் சரவணனின் அரசியல் ஸ்ட்ன்டுகள் குறித்து மதுரை அரசியல் வாதிகள் கூறியதாவது:


latest tamil news

முதிர்ச்சியடையாத அரசியல்வாதி


-பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன்: பா.ஜ.,வில் இருந்து விலகியதற்கான காரணத்தை சரவணனிடம்தான் கேட்க வேண்டும். அவர் கட்சிக்கு வந்தார். அவருக்கு தேர்தலில் சீட், நகர் தலைவர் என பொறுப்பு தந்தோம். ஆனால் கட்சியில் முக்கியத்துவம் வந்ததற்கேற்ப அவர் நடந்து கொள்ளவில்லை. எனவே அவரைப் பற்றி கருத்துக்கூற எதுவுமில்லை.தேர்தலில் அவருக்கு சீட் கொடுத்தனர். என்னை விருதுநகர் தொகுதி பொறுப்பாளராக நியமித்ததால் அப்பணியை செய்தேன். அவர் பல கட்சிக்கு போய்விட்டு வந்தாலும், இங்கு முதிர்ச்சி அடைந்து கட்சியில் நிலைத்திருப்பார், நீடிப்பார் என்றுதான் நினைத்திருந்தோம்.

இந்த நிகழ்வு அவர் முதிர்ச்சியடையவில்லை என்றே காட்டுகிறது.முந்தாநாள்தான் அக்கட்சியின் பொருளாளரான அமைச்சர் துரைமுருகன், 'வேறு கட்சியில் இருந்து வருவோரை தி.மு.க.,வில் சேர்க்கக் கூடாது. அப்படி வருவோர் விபச்சாரம் செய்பவர்கள் என்றும் கூறியிருந்தார். இப்போது சரவணன் பா.ஜ.,வில் ராஜினாமா செய்து தி.மு.க.,வில் சேர உள்ளதாக கூறுகினறனர். இதற்கு பொருள் எனக்கு புரியவில்லை.சுயநலத்திற்காக எதையும் செய்வார்


-மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் மகா சுசீந்திரன் கூறியதாவது: மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் சரவணனுக்கு தெரியும். அவர்தான் அமைச்சர் நடந்து கொண்டது குறித்து ஆக்ரோஷமாக பேட்டி அளித்தார். அதற்கு பின்னர் அவருக்கு போன் வந்துள்ளது. அவர் மீது பல வழக்குகள் உள்ளன. அதனால் உறவினர்கள் மூலம் மிரட்டி அவரை மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இப்படி ஒரு சரவணன் போனால் ஒரு லட்சம் சரவணன்கள் பா.ஜ.,வுக்கு வருவார்கள். அவர் விலகியது கட்சிக்கு நன்மையே.எப்படியெனில் வரும் பொதுத் தேர்தல் நேரத்தில் விலகாமல் இப்போதே விலகியதன் மூலம் கட்சிக்கு நன்மையே செய்துள்ளார். அவர் தனது வெற்றிக்காக, சுயநலத்திற்காக எதையும் செய்பவர்.கட்சிமாறுவது கைவந்தகலை


-பாஸ்கர சேதுபதி, தொண்டரணி செயலாளர், ம.தி.மு.க.,: தி.மு.க.,வில் சீட் கிடைக்கவில்லை என்றுதான் பா.ஜ.,விற்கு தாவினார். மீண்டும் தி.மு.க., என் தாய்வீடு என வசனம் பேசியுள்ளார். அவர் எந்தக் கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார். ம.தி.மு.க.,வில் இருக்கும் போதே 'குடிகார கட்சி' என விமர்சனம் செய்தார். அவருக்கு தக்க பதிலடி கொடுத்தோம். தற்போது இவர் பா.ஜ.,வில் இருந்து துாக்கியடிக்கப்பட்டுள்ளது இயற்கை கொடுத்த தண்டனைதான்.

ஒரு கட்சியில் இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் கொள்கைக்காக தொடர வேண்டும். ஆனால் அவருக்கு ஒரு கொள்கையும் இல்லை; கோட்பாடும் இல்லை. ஆதாயம் இருந்தால் இருப்பார். இல்லையென்றால் கிளம்பி விடுவார். இவர் தி.மு.க.,விற்கு செல்ல ஆறு மாதங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. கட்சி மாறுவது அவருக்கு கைவந்த கலை.கட்சிக்கு எந்த இழப்புமில்லை


-ராஜரத்தினம், பா.ஜ., மாநில செயலாளர், அரசு தொடர்பு பிரிவு: கட்சியில் சரவணனுக்கு அனைத்து அதிகாரமும், கட்சிக்கு வந்ததுமே எம்.எல்.ஏ.,வாக போட்டியிடும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது. தேர்தலில் வேட்பாளர் நியமனம், கட்சியில் நிர்வாகிகள் நியமனம் செய்ய அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருந்தனர். கட்சியில் இருந்தது சில மாதங்களே ஆனாலும், 'தி.மு.க., பாசத்துடன்' தான் செயல்பட்டார். பா.ஜ., மதவாத கட்சி எனவும், சிறுபான்மையினரிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது எனவும் நா கூசாமல் கூறுகிறார். அவர் தானே நகர் தலைவர்.

அவர் சிறுபான்மையினருக்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடத்தினார்.முஸ்லிம் மக்கள் பாதிக்கும் வகையில் எந்த செயல் செய்தோம் என அவரே நினைத்து பார்க்கட்டும். மதுரையில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளில் இருந்து பா.ஜ.,வில் சேர்ந்தவர்கள் இவருக்காக சேர்ந்ததாக என நினைக்கிறார். அவர்கள் எல்லாம் மோடியின் செயல்பாட்டிற்காக வந்தவர்கள். அவர் வெளியேறியதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை.


latest tamil newsசெருப்பு வீச்சும்... கட்சித்தாவலும்...

பா.ஜ.,வில் இருந்தாலும் ஆறு மாதங்களாக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தொடர்பில் இருந்து, தி.மு.க.,வுக்கு தாவும் எண்ணத்தில் சரவணன் இருந்துள்ளார். அவர் அடிக்கடி கட்சி தாவுகிறார் என்பதை மனதில் வைத்திருந்த கட்சித் தலைமை, 'தற்போதைக்கு அவர் கட்சிக்கு வேண்டாம்' என்ற முடிவில் இருந்தது. தி.மு.க., விற்கு தாவும் எண்ணத்தில் இருந்ததால் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டும் தி.மு.க.,விற்கு குடைச்சல் கொடுக்காமல் மென்மையான போக்கை சரவணன் கடைபிடித்தார். இந்நிலையில் பா.ஜ.,வினரின் செருப்பு வீச்சு சம்பவம் தி.மு.க.,விற்கு 'ஈகோ' பிரச்னையாகி விட்டது. இதை சரிசெய்ய சரவணனை சரண்டர் ஆக்கி, பா.ஜ.,வுக்கு 'ஷாக்' கொடுக்க கட்சி விரும்பியது. இதையடுத்து இரவோடு இரவாக அந்த முக்கியப் புள்ளி சரவணனை அலைபேசியில் அழைத்து, அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டது. அதனை ஏற்று அமைச்சர் தியாகராஜனை சந்தித்து சரவணன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதன் மூலம் தி.மு.க.விற்கு தாவும் சரவணன் ஆசைக்கு வாசல் திறந்திருக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
15-ஆக-202218:30:05 IST Report Abuse
Murthy திமுகவில் இருந்தாழும்,பிஜேபி ல் இருப்பதும் ஒன்றுதான்.....
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
15-ஆக-202217:35:30 IST Report Abuse
sankar . கட்சி உருப்படுமா?
Rate this:
Cancel
15-ஆக-202213:48:37 IST Report Abuse
சத்யா இவர் எந்த கட்சியில் இருந்தாலும் தாவினாலு ம் கண்காணிப்பு வளையத்தில் தான் இருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X