'லோக் அதாலத்' மூலம்1366 வழக்கில் ரூ.4.91 கோடி தீர்வு

Added : ஆக 15, 2022 | |
Advertisement
சிவகங்கை--சிவகங்கையில் நடந்த 'லோக் அதாலத்' மூலம் 1,366 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4.91 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதிசாய் பிரியா தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதிசத்தியதாரா, மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி



சிவகங்கை--சிவகங்கையில் நடந்த 'லோக் அதாலத்' மூலம் 1,366 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4.91 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுமதிசாய் பிரியா தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதிசத்தியதாரா, மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ வழக்கு நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நடுவர் ஜி.சுதாகர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின்பேகம், மாஜிஸ்திரேட் அனிதா கிறிஸ்டி, சத்தியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் நீதிமன்றத்தில்மோசடி, வங்கி கடன் நிலுவை, குடும்ப பிரச்னை, குற்றவியல் வழக்குகள் என 1,366 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டு, அதற்கான ழப்பீடு தொகையாக ரூ.4 கோடியே 91 லட்சத்து 31 ஆயிரத்து 840 வழங்கப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர், ஊழியர்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X