சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து சென்னைக்கு விடிவு: தெளிந்த நீரோடையாகிறது அடையாறு, கூவம், பகிங்ஹாம்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னையின் முக்கிய நீர்வழித்தடங்களான அடையாறு ஆறு, கூவம் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, 402 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கழிவு நீரை மாற்று வழியில், கழிவு நீர் உந்து நிலையத்திற்கு கொண்டு செல்லுதல், சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பெரிய அளவு குழாய்கள் பதித்தல் மற்றும் கழிவு நீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதன்

சென்னையின் முக்கிய நீர்வழித்தடங்களான அடையாறு ஆறு, கூவம் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, 402 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கழிவு நீரை மாற்று வழியில், கழிவு நீர் உந்து நிலையத்திற்கு கொண்டு செல்லுதல், சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பெரிய அளவு குழாய்கள் பதித்தல் மற்றும் கழிவு நீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதன் வாயிலாக, நீர்வழித்தடங்கள் தெளிந்த நீரோடையாக மாறும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.latest tamil news
சென்னை மாநகராட்சி, 2011ம் ஆண்டு வரை, 10 மண்டலம், 155 வார்டுகள் கொண்ட, 174 சதுர கி.மீ., பரப்பில் இருந்தது. தற்போது நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, 15 மண்டலம், 200 வார்டுகள் கொண்ட, 426 சதுர கி.மீ., பரப்பாக விரிவடைந்துள்ளது. இதில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன.சென்னையின் முக்கிய நீர்வழித்தடங்களாக அடையாறு ஆறு, கூவம் மற்றும் பகிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன.

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லையில், அடையாறு ஆறு 20 கி.மீ.,யும், கூவம் 32 கி.மீ.,யும், பகிங்ஹாம் கால்வாய் 30 கி.மீ., துாரமும் பயணிக்கின்றன.மழைக்காலத்தில் வெள்ளத்தை வடிய வைக்கவும், இதர காலங்களில் கழிவு நீரை கடலில் சேர்க்கும் வழித்தடமாகவும் உள்ளது.இதன் காரணமாக, மூன்று நீர்வழித்தடங்களும் சாக்கடையாக மாறிவிட்டன. கழிவு நீர் கலப்பதை தடுக்க, பல்வேறு காலகட்டத்தில், அரசு பல கோடி ரூபாய் செலவழித்தும், மூன்று நீர்வழித்தடங்களிலும் கழிவு நீர் கரை புரண்டு ஓடுகிறது.

கடைசியாக, சுனாமி மற்றும் 2015 பெரு மழையின் போது, இந்த நீர்வழித்தடங்கள் தெளிந்த நீரோடையாக காணப்பட்டன. இயற்கை தானாக சுத்தப்படுத்தி கொடுத்த இந்த நீர்வழித்தடங்களில் கழிவு நீர் கலக்காமல் பராமரிப்பது தான், இயற்கை சூழலுக்கு உகந்தது என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், கழிவு நீர் கலப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.இதில், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கூவத்தில், 37 இடங்கள், அடையாறு ஆற்றில் 39 இடங்கள் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில், 22 இடங்களில், கழிவு நீர் கலப்பது கண்டறியப்பட்டது.


latest tamil news
இதையடுத்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து, 402 கோடி ரூபாயில், மூன்று நீர்வழித்தடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.இதன்படி, அடையாறு ஆற்றில் 125 கோடி ரூபாய், கூவத்தில் 193 கோடி ரூபாய் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் 84 கோடி ரூபாயில் பணிகள் நடைபெறுகின்றன.

இதில், கழிவு நீர் இடைமறிக்கப்பட்டு, மாற்று வழியில் குழாய் வழியாக, கழிவு நீர் உந்து நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. கழிவு நீரை இடைமறிக்க முடியாத இடங்களில், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.இத்திட்டத்தில் 145, 148 ஆகிய வார்டுகள், நெற்குன்றம் பகுதியில் 5,800 கழிவு நீர் இணைப்புகள் வழங்கி, கூவத்தில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட உள்ளது.

அதேபோல் அடையாறு, ராதாகிருஷ்ணபுரத்தில் உள்ள, 130 குடிசை வீடுகளுக்கு, 100 ரூபாய் 'டிபாசிட்' கட்டணத்தில் கழிவு நீர் இணைப்பு வழங்கி, அடையாறு ஆற்றில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட உள்ளது.மேலும், 40 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப பதிக்கப்பட்ட, குறைந்த அங்குலம் கொண்ட குழாயும், கழிவு நீர் கலப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதனால், நீர்வழித்தடம் அருகே உள்ள 6, 8, அங்குலம் கொண்ட குழாய்கள் மாற்றப்பட்டு, 24, 30 அங்குலம் கொண்ட குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.இதன் வாயிலாக அடையாறு ஆறு, கூவம், பகிங்ஹாம் கால்வாயில் செல்லும் கழிவு நீரை தடுத்து, தெளிந்த நீரோடையாக மாற்ற முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.சேத்துப்பட்டு, அடையாறு, நுங்கம்பாக்கம், தாடண்டன்நகர் பகுதி சுத்திகரிப்பு நிலையங்கள், பணி முடிவடையும் நிலையில் உள்ளன. கழிவு நீரை வழிமறித்து, மாற்று வழியாக கழிவு நீர் உந்து நிலையம் கொண்டு செல்ல, குழாய் பதிக்கும் பணியும் நடக்கிறது. அடுத்து, கழிவு நீர் இணைப்பு வசதி கொடுக்க வேண்டி உள்ளது. ஒன்றரை ஆண்டில், அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். - குடிநீர் வாரிய அதிகாரிகள்


latest tamil news

மாற்று வழியில் குழாய் பதிப்பு


மழை நீர் வடிகால்கள் வழியாக, 39 இடங்களில் இருந்து, அடையாறு ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. அதே போல், 37 இடங்களில் இருந்து கூவத்திலும், 22 இடங்களில் இருந்து பகிங்ஹாம் கால்வாயில் கழிவு நீர் கலக்கிறது.நீர்வழித்தடத்தை ஒட்டிய வடிகால் அருகில், 10 அடி ஆழத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும். அதில், வடிகாலில் வரும் கழிவு நீர் விழும் வகையில் கட்டமைக்கப்படுகிறது.

இந்த கழிவு நீரை, தானியங்கி மோட்டாரில் இறைத்து, குழாய் வழியாக அருகிலுள்ள கழிவு நீர் உந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். அதற்கு ஏற்ப குழாய் பதிக்கப்படுகிறது. மழைக் காலங்களில், வடிகாலில் வரும் மழை நீர், நீர்வழித்தடத்தில் விழும் வகையில், தொட்டியில் உள்ள தானியங்கி மோட்டார் அணைத்து வைக்கப்படும்.நீர்வழிப் பாதைகள்

அடையாறு ஆறு: செங்கல்பட்டு மாவட்டம், ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, 42 கி.மீ., பயணித்து, பட்டினம்பாக்கம் கடலை அடைகிறது. சென்னை மாநகராட்சி எல்லையில், 20 கி.மீ., பயணிக்கிறது. இந்த ஆறு, 30 முதல் 650 அடி அகலம் கொண்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் உள்ள, 60க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீரை, கடலுக்கு கடத்தும் பணியை, இந்த ஆறு செய்கிறது. ௧௦ ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருநீர்மலை வரை சுத்தமான நீராக சென்றது. புறநகர் பகுதி வளர்ச்சி காரணமாக தற்போது, துவங்கும் இடத்தில் இருந்தே கழிவு நீர் கலக்கிறது.

கூவம்: திருவள்ளூர் மாவட்டம், கேசவரம் பகுதியில் துவங்கும் கூவம், 72 கி.மீ., பயணித்து, மெரினா அருகில் கடலில் சேர்கிறது. சென்னை மாநகராட்சி எல்லையில், 32 கி.மீ., பயணிக்கிறது. 'சென்னையின் தேம்ஸ்' என ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்பட்ட நதி. கூவம் துவங்கும் இடத்தில் இருந்து ஆவடி, திருவேற்காடு வரை சுத்தமாக உள்ளது. அதன் பின், குடியிருப்பு, தொழிற்சாலை கழிவுகளால் கூவம் நாறிக் கிடக்கிறது.

பகிங்ஹாம் கால்வாய்: ஆந்திரா மாநிலத்தில் துவங்கும் இந்த கால்வாய் மரக்காணம், கூனிமேடு பகுதி வரை, 420 கி.மீ., துாரம் கொண்டது. சென்னை மாநகராட்சி எல்லையில் வடக்கு, மத்தியம், தெற்கு என, 30 கி.மீ., பயணிக்கிறது. இதில், வடக்கு கால்வாயில் வரும் நீர், கூவத்தில் கலக்கிறது. மத்திய கால்வாயில் வரும் நீர், அடையாறு ஆற்றில் கலக்கிறது.தெற்கு கால்வாயில் செல்லும் நீர், முட்டுக்காடு பகுதியில் கலக்கிறது. அக்காலத்தில், படகில் உப்பு, விறகு ஏற்றிச் செல்ல கால்வாய் பயன்பட்டது. கடலோர பகுதிகளில், இக்கால்வாயில் முகத்துவாரங்கள் உள்ளன. தற்போது ஆக்கிரமிப்பு, கழிவு நீரால் சீரழிந்துள்ளது. மீண்டும், படகு போக்குவரத்து விட அரசு முயற்சி செய்கிறது. அதற்கு முன், கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15-ஆக-202223:39:24 IST Report Abuse
Ramesh Sargam முதலில் ஆறுகளின் கரையோர பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்களை வேறு இடங்களில் வீட்டு வசதி செய்துகொடுத்தது அங்கிருந்து அகற்றவேண்டும். ஆற்றின் இரு கரைகளிலும் குப்பை கொட்டுவதை நிறுத்தி, அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் தொழிட்சாலைகள் கழிவுநீர் கலக்காமல் செய்யவேண்டும். பிறகு பூங்கா போன்றவற்றை அமைக்கவேண்டும்.
Rate this:
Cancel
SIVA - chennai,இந்தியா
15-ஆக-202220:59:48 IST Report Abuse
SIVA நான்கு லக்ஷம் கோடி செலவு செய்தாளும் இதை சரி செய்ய முடியாது மீண்டும் ஒரு வெள்ளம் வந்தால் மட்டுமே சரியாகும்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
15-ஆக-202219:12:43 IST Report Abuse
DVRR ரூ 402 கோடி என்றால் ரூ 180 கோடி கமிஷன் திமுகவிற்கு ஆகவே மிகுந்த மகிழ்ச்சியில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X