அரிசியால் இந்திய வரைபடம்: பள்ளி மாணவன் அசத்தல்!

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 5ம் வகுப்பு மாணவன், 27 ஆயிரத்து 394 அரிசிகளைப் பயன்படுத்தி, இந்திய வரைபடம் செய்து அசத்தியுள்ளார்.கோவை, நியூ சித்தாபுதுார் பகுதி சேர்ந்த பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்- சிஜி தம்பதியின் மகன் கனிஷ். நேஷனல் மாடல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வம் அதிகம். இந்நிலையில், 75வது சுதந்திர தின

கோவை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 5ம் வகுப்பு மாணவன், 27 ஆயிரத்து 394 அரிசிகளைப் பயன்படுத்தி, இந்திய வரைபடம் செய்து அசத்தியுள்ளார்.

கோவை, நியூ சித்தாபுதுார் பகுதி சேர்ந்த பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்- சிஜி தம்பதியின் மகன் கனிஷ். நேஷனல் மாடல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வம் அதிகம். இந்நிலையில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 27,394 அரிசிகளைப் பயன்படுத்தி, தேச வரைபடத்தை உருவாக்கியுள்ளார்.



latest tamil news




இதுகுறித்து கனிஷ் கூறியதாவது:
இரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி அளவிலான ஓவிய போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளேன். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுமையான முறையில் ஓவியம் படைக்க, இம்முயற்சியில் இறங்கினேன். மக்களுக்கு சுதந்திரம் அடைந்த ஆண்டு தெரியும்.
ஆனால், சுதந்திரம் அடைந்து, நடப்பாண்டின் சுதந்திர தினத்தோடு சேர்த்து எத்தனை நாட்கள் என்பது தெரியாது. அந்த வகையில், 27 ஆயிரத்து, 394 நாட்களைக் குறிக்கும் வகையில், அதே எண்ணிக்கையிலான அரிசிகளைப் பயன்படுத்தி, மூவர்ணங்களைச் சேர்த்து, இந்திய வரைபடத்தை உருவாக்கியுள்ளேன். இதுபோன்ற வித்தியாசமான ஓவியங்களை வரைவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவேன்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-ஆக-202217:55:35 IST Report Abuse
வெகுளி சாதனை மகனை ஈன்றெடுத்த கண்ணன்- சிஜி தம்பதிக்கு பாராட்டுக்கள்... கனிஷ்க்கு வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel
Nachimuthu - mettur,இந்தியா
15-ஆக-202214:33:58 IST Report Abuse
Nachimuthu தமிழக மாணவர்களை பற்றி அரசியல் வாதிகள் ஏதும்பேசாமல் இருந்தால் எதுவும் சாதிப்பார்கள்
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-202210:44:16 IST Report Abuse
Chinnappa Pothiraj கனிஷ், வாழ்க்கையில் மென்மேலும் சாதிக்க வாழ்த்துகள்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X