" ஊழலை ஒழிக்க மக்களே துணை நில்லுங்கள்" - பிரதமர் மோடி வேண்டுகோள்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (63) | |
Advertisement
புதுடில்லி: நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று ,இதனை ஒழிக்க மக்கள் அனைவரும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை யில் ; மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது. தரமான பொருட்களை நாம் உற்பத்தி செய்து வருகிறோம். இந்தியாவில்

புதுடில்லி: நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று ,இதனை ஒழிக்க மக்கள் அனைவரும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை யில் ;



latest tamil news



மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது. தரமான பொருட்களை நாம் உற்பத்தி செய்து வருகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பெருமையை தேடி தந்துள்ளது. வெளி நாட்டு பொருட்கள் ,பொம்மைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பிறரை சார்ந்திருக்காமல் வாழ வேண்டும்.

தளவாடங்கள் உற்பத்தி


பாதுகாப்பு துறையில் நாம் 300 தளவாடங்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறோம். தற்சார்பு கொள்கை அரசின் கொள்கை அல்ல. இது மக்கள் இயக்கம். தற்சார்பை நாம் முன்னெடுத்து செல்வோம்.



latest tamil news



பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலும். டிஜிட்டல் இந்தியா ,ஸ்டார்ட் அப் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறது.
ஊழலுக்கு எதிரான எண்ணம் வர வேண்டும். நாட்டை கொள்ள அடித்தவர்கள் தக்க தண்டனை பெற்றே தீர வேண்டும் . அதில் எந்தவொரு பெரிய நபரும் தப்பிக்க முடியாது. ஊழலுக்கு எதிரான போரில் மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குடும்ப அரசியல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். இது தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan - Trichy,இந்தியா
15-ஆக-202220:38:06 IST Report Abuse
Karthikeyan ரைடு என்ற பெயரில் வெளி வேஷம் போட்டு பின்னால் இருந்து பேரம் பேசி வாங்கிக்கொண்டு அப்படியே விட்டுவிடுவதை மக்கள் எட்டுஆண்டுகளாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
Rate this:
Cancel
Karthikeyan - Trichy,இந்தியா
15-ஆக-202220:37:07 IST Report Abuse
Karthikeyan கண்டைனர் பணம் பல ஆயிரம் கோடி அப்படியே வடக்கே கொண்டுசெல்லப்பட்டது...இதெல்லாம் மக்களுக்கு தெரியாதா..வெறும் ஊளையிடல் மட்டுமே....
Rate this:
Cancel
Karthikeyan - Trichy,இந்தியா
15-ஆக-202220:36:12 IST Report Abuse
Karthikeyan இதுபோல வெற்று ஊளையெல்லாம் இனிமேல் மக்களிடம் எடுபடாது...நான்கு ஆண்டுகள் நடத்திய நூற்றுக்கணக்கான ரைடுகள் என்னாச்சு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X