பால் கொள்முதல் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

Added : ஆக 15, 2022 | |
Advertisement
பால் கொள்முதல் விலையை உயர்த்த, விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:தீவன விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்கள் பாதித்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை, இந்த ஆண்டில் மூன்று முறை உயர்த்தி உள்ளன. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை


பால் கொள்முதல் விலையை உயர்த்த, விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தீவன விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்கள் பாதித்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை, இந்த ஆண்டில் மூன்று முறை உயர்த்தி உள்ளன. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தாமல், கொழுப்பு சத்து ஒரு சதவீதம், இதர சத்து, 0.5 சதவீதம் என குறைத்து, ஒரு கேன் பாலுக்கு, ஒன்று முதல் இரண்டு லிட்டர் வரை குறைவாக மதிப்பிட்டு பணம் வழங்கப்படுகிறது. லிட்டருக்கு விற்பனை விலையை, 3 ரூபாய் குறைத்த அரசு, இதுவரை அதை ஈடுசெய்யவில்லை.
ஒரு லிட்டர் பால், 65 ரூபாய் வரை விற்கும் தனியார் நிறுவனம், 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தினால், 50 காசு மட்டுமே உற்பத்தியாளருக்கு செல்கிறது. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு, 20 ரூபாய் உயர்த்தினால் மட்டுமே, உற்பத்தியாளர்களையும், ஆவின் நிறுவனத்தையும் காக்க முடியும். எனவே, கொள்முதல் விலையை உயர்த்தி, முதல்வர் அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X