2,035 பஸ்கள் வாங்க நடவடிக்கை போக்குவரத்து அமைச்சர் தகவல்

Added : ஆக 15, 2022 | |
Advertisement
''இந்த ஆண்டு புதிதாக, 2,035 பஸ்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்று, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.கிருஷ்ணகிரியில், அரசு போக்குவரத்து புறநகர் கிளை பணிமனையில், நகர மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கம் குறித்து, அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின், அவர் கூறியதாவது:மகளிருக்கான இலவச பஸ் கட்டணமாக


''இந்த ஆண்டு புதிதாக, 2,035 பஸ்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்று, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
கிருஷ்ணகிரியில், அரசு போக்கு
வரத்து புறநகர் கிளை பணிமனையில், நகர மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கம் குறித்து, அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின், அவர் கூறியதாவது:
மகளிருக்கான இலவச பஸ் கட்டணமாக கடந்தாண்டு, 1,600 கோடி ரூபாய், இந்த நிதியாண்டில், 1,900 கோடி ரூபாயை, தமிழக முதல்வர் வழங்கி
யிருக்கிறார். அரசு போக்குவரத்து சேலம் மண்டலம், நஷ்டத்திலிருந்து லாபகரமாக இயங்குகிறது. தர்மபுரி கோட்டத்துக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, ஓசூர் சாலை மார்க்கத்தில் தொழில் நிறுவனங்கள் பெருகியுள்ளதால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ்களில் காய்கறிகள் ஏற்றி செல்லவும், பஸ்சின் பின்புறம் விளம்பர பலகை வைத்துள்ளதை போல, இருபுறங்களிலும் விளம்பர பலகை வைத்து வருவாய் ஈட்டவும், செலவினங்களை குறைத்து போக்குவரத்து கழகங்களை, லாபகரமாக இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக, 2,035 பஸ்கள் கொள்முதல் செய்யும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செங்குட்டுவன், முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X