'ஸ்டன்ட் மாஸ்டர்' கனல் கண்ணன் கைது

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
சென்னை: ஈ.வெ.ரா., சிலை குறித்து பேசிய விவகாரத்தில், சினிமா 'ஸ்டன்ட் மாஸ்டர்' கனல் கண்ணன் இன்று (ஆக.,15) கைது செய்யப்பட்டார்.சென்னை, மதுரவாயலில் இம்மாதம் 1ம் தேதி நடந்த கூட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.'ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா., சிலையை உடைத்து அகற்றும் நாள் தான்
கனல் கண்ணன், கைது

சென்னை: ஈ.வெ.ரா., சிலை குறித்து பேசிய விவகாரத்தில், சினிமா 'ஸ்டன்ட் மாஸ்டர்' கனல் கண்ணன் இன்று (ஆக.,15) கைது செய்யப்பட்டார்.

சென்னை, மதுரவாயலில் இம்மாதம் 1ம் தேதி நடந்த கூட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.'ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா., சிலையை உடைத்து அகற்றும் நாள் தான் ஹிந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்' என, அவர் பேசினார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார்.

இதையடுத்து இரு பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த கனல் கண்ணன், புதுச்சேரியில் தங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் கனல் கண்ணனை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
16-ஆக-202209:11:18 IST Report Abuse
M S RAGHUNATHAN திரு முத்துராஜ் அவர்களுக்கு: முத்தமிழ் வித்தகர் (விற்றவர்), கலைஞர், செம்மொழி கொண்டான் போன்ற பட்டங்கள் எந்த பல்கலை கழகத்தில் எந்த ஆராய்ச்சிக்காக வழங்கப் பட்டது. ஒரு முனைவர் பட்டம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் வழங்கிய போது நடந்த கதை தெரியுமா.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
15-ஆக-202218:12:14 IST Report Abuse
M S RAGHUNATHAN It is ironic that on an Indepence day, the police took away the civil liberties of an Individual. JAI HIND.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
15-ஆக-202218:10:53 IST Report Abuse
M S RAGHUNATHAN சுதந்திர தினத்தன்று ஒருவரை கைது செய்த காவல் துறையினர் மெச்சத் தகுந்தவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X