75ம் ஆண்டு சுதந்திர தினம்.. தெறிக்க விட்ட பிரபலங்கள்...!

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நாடு முழுவதும் இன்று 75ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் உட்பட அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தியுள்ளனர். பிரபலங்கள் முதல் பலரும் தங்களின் வீடுகளில் ஆர்வமுடன் கொடியேற்றி உள்ளனர். மேலும்,
சுதந்திரதினம், 75வதுசுதந்திரதினம், பிரபலங்கள், நடிகர்கள், சூரி, மோகன்லால், துல்கர்சல்மான், கீர்த்திசுரேஷ், ஸ்ரீநிதிஷெட்டி, கோஹலி, அனுஷ்காசர்மா, கோலாகலம், சுதந்திரதின கொண்டாட்டம், independenceday, 75thindependenceday, viratkohli, keerthysuresh, soori, mohanlal, dulquersalmaan,

நாடு முழுவதும் இன்று 75ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் உட்பட அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தியுள்ளனர்.

பிரபலங்கள் முதல் பலரும் தங்களின் வீடுகளில் ஆர்வமுடன் கொடியேற்றி உள்ளனர். மேலும், தேசியக்கொடியுடன் புகைப்படத்தை பதிவிட்டால் மத்திய அரசின் சான்றிதழ் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.latest tamil newsஇந்நிலையில் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியுடன் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படம், வீடியோக்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை சரண்யா துராடி மெரினா பீச்சில், தள்ளுவண்டி விற்பனையாளர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலருக்கும் தேசியக்கொடியை வழங்கி அவர்களுடன் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.latest tamil newsநடிகர் சூரி, தேசியக்கொடியுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு 'வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!' எனக் குறிப்பிட்டுள்ளார். சைபராபாத் காவல்துறை சார்பில் நடந்த விழாவில் நடிகர் துல்கர் சல்மான் கொடியேற்றி மரியாதை செலுத்தியுள்ளார். 'இந்த அற்புதமான வாய்ப்பிற்காக சைபராபாத் பெருநகர காவல்துறைக்கு சிறப்பு நன்றி' என்று தன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார்.latest tamil newsஇதேபோல் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் அவரின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, நடிகர் சிரஞ்சீவி, மோகன்லால், அக்ஷய்குமார், அனில்கபூர், நடிகைகள் கீர்த்திசுரேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பாடகி மஹதி, ஸ்ரேயா கோஷல் உட்பட பலரும் தேசியக்கொடியுடன் தங்களின் புகைப்படத்தை பதிவிட்டு தேசப்பற்றுடன் கூடிய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். பலரும் இந்த புகைப்படங்களை லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-202216:58:07 IST Report Abuse
ஆனந்த் வேண்டாம்.வேண்டுமென்றே மதிக்காதவர்களுக்கு படம் ஓடக்கூடாது.அமீர்கான்ஜோசப் விஜய்சூர்யா.....மற்ற சில்லறைப் பசங்கள் நம் காலில் விழுந்து கெஞ்சவேண்டும்.
Rate this:
Cancel
15-ஆக-202215:02:40 IST Report Abuse
கோவிந்தா தமிழ் சினிமாவை புறக்கணிப்போம்..... மு.க. ஃபேமிலி க்கு பயந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்க மறுக்கிறார்கள்.... நம் கூத்தாடிகள்...... BOYCOTT TAMIL FILM INDUSTRY
Rate this:
Ramaswami V - Petaling Jaya,மலேஷியா
16-ஆக-202202:25:25 IST Report Abuse
Ramaswami Vநல்ல கருத்து, தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தமிழ் பத்திரிகை, செய்தி விவாத சேனல் என்று ஒரு தலை பட்சமாக நடந்து கொள்ளும் அனைவரையும் புறக்கணிப்போம். நன்றி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X