‛ஹலோ' பதிலாக ‛வந்தே மாதரம்' சொல்லுங்கள்: மஹா., அமைச்சர் உத்தரவு

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் செல்போனில் பேசும் போது, ஹலோ என துவங்குவதற்கு பதில், ‛வந்தே மாதரம்' என பேச்சை துவங்க வேண்டும் என அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், அதிருப்தி சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும்
Maharashtra, Govt Employees, Vande Mataram, Hello, Ordered, Minister, மஹாராஷ்டிரா, அரசு ஊழியர்கள், வந்தே மாதரம், ஹலோ, அமைச்சர், உத்தரவு

மும்பை: மஹாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் செல்போனில் பேசும் போது, ஹலோ என துவங்குவதற்கு பதில், ‛வந்தே மாதரம்' என பேச்சை துவங்க வேண்டும் என அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், அதிருப்தி சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இவர்கள் இருவரும் பதவி ஏற்று, சுமார் 41 நாட்களுக்கு பிறகு, அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டது. சிவசேனாவை சேர்ந்த 9 பேர், பா.ஜ.,வை சேர்ந்த 9 பேர் என 18 பேர் அமைச்சர்களாக கடந்த வாரம் பதவியேற்றனர். இவர்களுக்கான இலாக்காக்கள் நேற்று (ஆக.,14) ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டது. கலாச்சாரத்துறை பா.ஜ.,வின் சுதிர் முங்கந்திவாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அமைச்சராக சுதிர் முங்கந்திரவாரு பொறுப்பேற்றதும் அதிரடியான ஒரு உத்தரவை பிறப்பித்தார். மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் செல்போனில் பேசும் போது, ஹலோ என தொடங்க கூடாது என்றும் வந்தே மாதரம் என சொல்லி பேச்சை தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news



இதுதொடர்பாக அவர் கூறியதாவது: நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். 76வது சுதந்திர தினத்துக்குள் நுழைகிறோம். செல்போனில் பயன்படுத்தும் ஹலோ எனும் சொல் ஒரு ஆங்கில வார்த்தை. இதை விட்டுவிட வேண்டும். இதற்கு பதில் வந்தே மாதரம் எனும் வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இது எனது விருப்பம். வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தையல்ல. ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்கும் உணர்வு. இதன்மூலம் நாட்டின் மீதான பற்று அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
16-ஆக-202204:02:36 IST Report Abuse
பிரபு ரொம்ம்ம்ம்ம்ம்ப முத்தி போச்சு. என்னத்த சொல்ல.
Rate this:
Cancel
Gnana Subramani - Chennai,இந்தியா
15-ஆக-202213:51:06 IST Report Abuse
Gnana Subramani செல்ஃபோன் கூட அயல் நாட்டு பொருள். அதை கூட உபயோகிக்க கூடாது என்று உத்தரவு போடவும்
Rate this:
Cancel
Shankar - Hawally,குவைத்
15-ஆக-202213:29:50 IST Report Abuse
Shankar நம்நாட்டில், குறிப்பாக மும்பையில் நான் பலமுறை பல வங்கிகளுக்கோ அல்லது தனி நபர்களுக்கு போன் செய்யும்போது (நமஸ்கார்) வணக்கம் என்று சொன்னால் அதற்க்கு அவர்களிடமிருந்து வணக்கம் என்ற பதில் வருவதில்லை. மாறாக சொல்லுங்கள் என்று சொல்வார்கள். இது என்னோடு பலமுறை நடந்துள்ளது. சில நேரங்களில் கோபத்துடன் சத்தம் போட்டதும் உண்டு. இப்படி இருக்கையில் வந்தே மாதரம் என்று சொல்வது கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X