கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்.பி.ஐ..!

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்துவதாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. வட்டி உயர்வு இன்று (ஆக.15) முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதனையடுத்து பல்வேறு வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின்
எஸ்.பி.ஐ, SBI, Lending Rate, MCLR, loans, கடன்கள், வட்டி விகிதம் உயர்வு, பணவீக்கம், ரிசர்வ் வங்கி

அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்துவதாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. வட்டி உயர்வு இன்று (ஆக.15) முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.


பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதனையடுத்து பல்வேறு வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளது.

இதன்படி, 3 மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.15 சதவீதத்தில் இருந்து 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. 6 மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.45 சதவீதத்தில் இருந்து 7.65 ஆகவும், ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 7.70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுக்கான வட்டி விகிதம் 7.7 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாகவும், 3 ஆண்டுக்கான வட்டி விகிதம் 7.8 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


latest tamil news



கடந்த மாதம், எஸ்.பி.ஐ, எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி இருந்தது. வட்டி விகித உயர்வால், வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இ.எம்.ஐ அதிகரிக்கும்.

ஏப்ரல் 2016 முதல் எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் வங்கிகள் டெபாசிட், செலவுகள் உள்ளிட்டவற்றை பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு வங்கிகள் வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருகின்றன. அனைத்து வங்கி கடன்களும் எம்.சி.எல்.ஆர் அல்லது ஈ.பி.எல்.ஆர் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஈ.பி.எல்.ஆர் என்பது நேரடியாக ரெபோ விகிதத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.


எஸ்.பி.ஐ, கடந்த வாரம் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன்படி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு பொதுமக்களுக்கு 2.90 முதல் 5.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.45 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-202210:18:12 IST Report Abuse
அப்புசாமி அவிங்க குடுக்கும் கடனுக்குத்தான் வட்டி வசூல் அதிகரிப்பு. நாம வெக்கிற பணத்துக்கு அல்ல. பேங்கில்.பணம் வைப்பதே வேஸ்ட். அந்தப் பணத்தில் டீக்கடை போடலாம். பகோடா விக்கலாம்.
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
15-ஆக-202220:55:17 IST Report Abuse
சாண்டில்யன் நிரந்தர வைப்பு நிதிகளுக்கு ஒன்பது சதவிகிதத்துக்கு மேல் பெற்றிருக்கிறோம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி உழைத்து ஓய்ந்துபோன மூத்த குடிகளை சுரண்டி கார்போரேட்டுகளுக்கு கடன் மொத்தமும் ரிப்பீட் வட்டி தள்ளுபடியல்ல அசலும் வட்டிம் சேர்த்து மொத்தமாக தள்ளுபடி செய்யும் நம்ம மோடி வாய்க பாரத் மாதா கீ ஜே வந்தே மாதரம்
Rate this:
Cancel
15-ஆக-202215:34:04 IST Report Abuse
அப்புசாமி கொஞ்சம்.பொறுங்க. 25 வருஷத்தில் எல்லாம் கிடைக்கும்.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
15-ஆக-202221:46:13 IST Report Abuse
Barakat Aliபணவீக்கத்தைப் பொறுத்து ஆர்.பி.ஐ. இவ்வாறு பல வருடங்களாக செய்து வருகிறது ..... உனக்கு மோடியை கிண்டல் செய்வது ஒரு மேனியா .... சொறி பிடித்தவன் அது சரியான பிறகும் சொரிந்து கொண்டிருப்பான் .... அது போல ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X