ஸ்காட்லாந்தில் இலவச சானிட்டரி நாப்கின் உரிமை சட்டம் அமல்

Updated : ஆக 15, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
உலக பொது சுகாதார வரலாற்றில் முதல் நாடாக, பெண்களுக்கு சானிட்டரி பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உரிமையாக்கும் சட்டம், ஸ்காட்லாந்தில் அமலுக்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு அங்கமாக திகழும் ஸ்காட்லாந்தில், கவுன்சில், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களுக்கு, மாதவிடாய் தொடர்புடைய நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யும்
Scotland,ஸ்காட்லாந்து, சானிட்டரி நாப்கின், Sanitary Products, free, இலவசம், First Country, Ground Breaking, Legislation, உரிமை சட்டம் , பிரிட்டன்


உலக பொது சுகாதார வரலாற்றில் முதல் நாடாக, பெண்களுக்கு சானிட்டரி பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உரிமையாக்கும் சட்டம், ஸ்காட்லாந்தில் அமலுக்கு வந்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு அங்கமாக திகழும் ஸ்காட்லாந்தில், கவுன்சில், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களுக்கு, மாதவிடாய் தொடர்புடைய நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாதவிடாய் பொருட்கள் உரிமை சட்டம் இயற்றப்பட்டது. புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


latest tamil newsகடந்த 2017 முதல் 27 மில்லியன் யூரோக்கள், பொது இடங்களில் சானிட்டரி பொருட்கள் கிடைக்க செலவிடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் சானிட்டரி பொருட்கள் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்ய சட்டரீதியாக அங்கீகாரம் கேட்டு லேபர் கட்சியை சேர்ந்த எம்.பி., மோனிகா லெனன் பிரசாரம் செய்து வந்த நிலையில், 2020ம் ஆண்டு ஸ்காட்லாந்து பார்லியில் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேறியது.


latest tamil newsலெனன் கூறுகையில், 'உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கடினமான
உழைப்பால், சானிட்டரி பொருட்களை பெறுவதற்கான உரிமை சட்டம், அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்ச்சியாக மாதவிடாய் கண்ணியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்தவர்கள் சாதனையில் மற்றுமொரு மிகப்பெரிய மைல்கல் ஆகும். இது முற்போக்கு, துணிச்சலான அரசியல் தேர்வு என்கிற வித்தியாசத்தை காட்டுகிறது.'

இவ்வாறு அவர் கூறினார்.

பிரிட்டனில் மாதவிடாய் வறுமையை ஒழிக்க போராடி வரும் ஹே கேர்ல்ஸ் (Hey Girls), என்ற என்.ஜி.ஓ அமைப்பு, பொது கழிப்பிடங்களில் சானிட்டரி பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது. கோவிட் சமயத்தில், ஸ்காட்லாந்தில் உள்ள 4 பெண்களில் ஒருவர், மாதவிடாய் வறுமையை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது.

மாதவிடாய் வறுமை என்பது குறித்து விவரிக்கையில், நீங்கள் சூப்பர் மார்க்கெட் செல்லும் போது, ஒன்று பாஸ்தா வாங்க வேண்டும் அல்லது நாப்கின் வாங்க வேண்டும் என கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subramanian - Mumbai,சிங்கப்பூர்
15-ஆக-202216:43:57 IST Report Abuse
subramanian vidia arasu govt can pass an act to follow this free to be implemented in TamilNadu
Rate this:
பிரபு - மதுரை,இந்தியா
16-ஆக-202203:57:23 IST Report Abuse
பிரபுபெண்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள், எனவே இந்த திட்டத்தை இந்தியா முழுதும் கொண்டுவரலாமே. உமக்கு விடியல் அரசை குறை சொல்ல வேண்டும். திட்டத்தின் மீது அக்கறை எல்லாம் கிடையாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X