தமிழகத்தில் லஞ்சம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் லஞ்சம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுவதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: 75வது சுதந்திர தினம் முடிந்து, 76வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தருணமிது. காஷ்மீரில்
தமிழகம், லஞ்சம், குடும்ப அரசியல், தலைவிரித்தாடுகிறது, பாஜக, பாஜ, அண்ணாமலை, குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் லஞ்சம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுவதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: 75வது சுதந்திர தினம் முடிந்து, 76வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தருணமிது. காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்ட தேசியக் கொடியை இங்கு ஏற்றி உள்ளோம். சுதந்திரத்துக்கு பாடுபட்டதில் தமிழகத்தின் பங்கு மிக அதிகம். தமிழகத்தில் மருது சகோதரர்கள் முதல் பலர் சுதந்திரத்துக்காக போராடி உள்ளனர்.

கடந்த ஓராண்டாகவே சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பா.ஜ., கொண்டாடி வருகிறது. இன்று தமிழகத்தில் தேசியக்கொடி இல்லாத வீடுகளே இல்லை. இந்தியா ஒற்றுமையின் வடிவம் என்பதை தமிழக மக்கள் காட்டி உள்ளனர். இல்லம்தோறும் தேசியக் கொடி ஏற்றியதற்காக அனைத்து தமிழ் மக்களுக்கும் பா.ஜ.,வின் நன்றிகள். அனைத்து துறைகளிலும் பெண்கள் வலிமையான இடத்தை பிடித்துள்ளனர் என்று பிரதமர் பேசியுள்ளார். இந்தியாவின் கண்முன் இருப்பது லஞ்சம், குடும்ப அரசியல் என்ற இரு பிரச்னைகள் தான் என்றும் பிரதமர் பேசியுள்ளார்.


latest tamil newsஏழை மக்கள், திறமை உள்ளவர்கள் முன்னேறிச் செல்ல லஞ்சம் தடையாக உள்ளது. லஞ்சம் வாங்குவோர், குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்து கட்ட வேண்டும். தமிழகத்தில் லஞ்சம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது. இதை ஒழிக்க பா.ஜ., கடுமையாக உழைக்கும். அடுத்த 25 ஆண்டுகள் முடிந்த உடன், தமிழகம், இந்தியாவின் விஷ்வ குருவாக வர வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
19-ஆக-202214:02:31 IST Report Abuse
Narayanan Action must be strong and immediate . Means only dismiss this government
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
16-ஆக-202202:30:35 IST Report Abuse
BASKAR TETCHANA அண்ணாமலைக்கு பிரதமர் மோடிக்கும் ஒரு வேண்டு கோல். தினமும் குடும்ப அரசியல் என்று கூவி கொண்டு இருக்கிறீர்கள். இதுவரை எதையாவது நிரூபித்து காட்டினீர்களா.. அண்ணாமலையை பாராட்டுகிறேன். ஒவ்வொரு உழலாக எடுத்து விடுகிறீர்கள்.சந்தோஷம். ஆனால் இதுவரை ஒன்றையும் நிரூபிக்க முடியாமல் திணறுகிறீகள். யாருக்கேனும் பயப்படுகிறீர்களா. பதினோரு மந்திரிகளை மீது குற்றம் சுத்தி பத்து மாதங்கள் ஆகின்றன.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
16-ஆக-202209:14:10 IST Report Abuse
Visu Iyerதிறமை இல்லாதவர்கள் பாஜகவினர் என்று சொல்றீங்க புரிகிறது.. அது இருந்தால் இந்தியா முன்னேறி இருக்காதா என்ன?...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-ஆக-202200:24:37 IST Report Abuse
Vena Suna திமுக ,அதிமுக இரண்டும் மக்கள் அறியாமையை கோட் கோடியாக பணமாக மாற்றி சேர்த்து விட்டது.பாஜக நல்ல கட்சி என்றாலும் ஒன்றும் அண்ணா முடியாது இங்கே.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
16-ஆக-202209:14:52 IST Report Abuse
Visu Iyerபாஜக இல்லாத பாரதம் படைப்போம். ஓர் அணியில் இருப்போம் உறுதியாக இருப்போம் வெற்றியே பெறுவோம்....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17-ஆக-202206:29:02 IST Report Abuse
NicoleThomsonஊழல் இல்லாத தமிழகம் என்று எழுத வக்கில்லை வந்துவிட்டான் பாரதம் பற்றி பேச, முதலில் பகுத்தறிவது மற்றும் நாத்திகம் என்றால் என்ன வெளிநாட்டினர் ... கற்றுக்கொள் பின்னர் பாரதம் குறித்து கறுத்து எழுதலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X