வாசகர்களே! தேசிய கொடியை பாதுகாப்போம் : மரியாதையுடன் அகற்றுவோம்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
இந்தியாவின் சுதந்திர தின பவளவிழா , ‛சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா'வாக நாடு முழுவதும் இன்று (ஆக.,15) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்டத்தில் வீரத்துடன் பங்கேற்றவர்களை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை
National Flag, Dinamalar Readers, Request, Independence Day 2022, India, இந்தியா, தேசியக்கொடி, மூவர்ணக்கொடி, தினமலர் வாசகர்கள், கொடி, பாதுகாப்பு, மரியாதை

இந்தியாவின் சுதந்திர தின பவளவிழா , ‛சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா'வாக நாடு முழுவதும் இன்று (ஆக.,15) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்டத்தில் வீரத்துடன் பங்கேற்றவர்களை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடைய உள்ள நிலையில், மக்கள் தாங்கள் ஏற்றிய தேசியக்கொடியினை முறையுடனும் மரியாதையுடனும் கீழிறக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

தேச விரோதிகள் பெரிதும் எதிர்பார்ப்பது ஆகஸ்ட் 15ம் தேதியை அல்ல, 16ம் தேதியை.. ஆம் அன்றைய தினத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம் முடிந்துவிட்டது என சிலர் மூவர்ணக் கொடியை தரையில் வீசி எறிந்தால் அதனை புகைப்படம் எடுத்து, தேசியக்கொடியை அவமதித்துவிட்டனர் என சில தேச விரோதிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மூவர்ணக்கொடியை குப்பையில் வீசுவது, சேற்றில் பட்டு கறை படிந்திருப்பதாக காண்பிப்பது போன்ற பல விஷயங்களை உருவாக்கவும் முயற்சிக்கலாம். எனவே, அத்தகைய சூழலை நாம் கவனமுடன் கையாள வேண்டும்.


latest tamil news


மூன்று நாட்களும் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு, ஆகஸ்ட் 16ம் தேதி கொடியை மரியாதையுடன் கீழிறக்க வேண்டும். அதனை மற்ற சமயங்களில் பயன்படுத்தும் வகையில் அலமாரி அல்லது பெட்டியில் பத்திரமாக வைத்திருக்கவும். ஏனெனில் எந்தவொரு விஷயங்களிலும்கூட தேச விரோதிகளுக்கு சுட்டிக்காட்ட வாய்ப்பளிக்கக் கூடாது. எனவே தேச பக்தர்களான நாம் ஒவ்வொருவரும் முழு நாட்டையும் கட்டிக்காக்கும் திறன் படைத்தவர்கள். இதனை பலருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.


latest tamil newsநம் வாசகர்கள் ஒவ்வொருவரும் இந்த செய்தியினை எடுத்து செல்ல வேண்டும். மேலும், எங்கெல்லாம் தேசியக்கொடி தரையில் கிடந்தாலோ, சேதபடுத்தப்பட்டிருந்தாலோ, அதனை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். நாடு போற்றும் நம் தேசியக்கொடியை காகிதம் போல் தரையில் வீசாதீர்கள்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-ஆக-202217:21:11 IST Report Abuse
Ramesh Sargam வாசகர்களே தேசிய கொடியை பாதுகாப்போம் : மரியாதையுடன் அகற்றுவோம். இந்த பணிவான வேண்டுதலில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஆக-202216:15:29 IST Report Abuse
Natarajan Ramanathan இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் தேசிய கொடியை சேகரிக்கிறார்கள்....
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-ஆக-202215:28:12 IST Report Abuse
ஜெயந்தன் .. 75 வருஷமா நாம் கொடி ஏற்றவில்லையா...சட்டையில் கொடியோடுதானே வந்தோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X