உடுமலை:உடுமலை, அரசு கலைக்கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டின், இளநிலைப்பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.மொத்தம், 864 இடங்கள் உள்ள நிலையில், மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியலில் 2,601 முதல் 3,000 வரையிலான இடங்களைப்பெற்றிருந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.இதில், இயற்பியல், புள்ளியியல், பி.காம்., (சிஏ) பாடப்பிரிவுகளில், தலா 2; வேதியியல், தாவரவியல், கணித அறிவியல் பாடப்பிரிவுகளில், தலா, 1; கணிதவியல் பாடப்பிரிவில், 10; தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில், 54; ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில், 55 என, மொத்தம் 128 மாணவர்கள் சேர்ந்தனர்.அதன்படி, கடந்த 8 முதல், 13ம் தேதி வரை நடத்தப்பட்ட முதற்கட்ட கலந்தாய்வு வாயிலாக 818 மாணவர்கள் கல்லுாரியில் இணைந்துள்ளனர்.அதேபோல, இளநிலைப் பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்டக்கலந்தாய்வு வரும், 25ல் நடைபெறும் என, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.