உடுமலை:உடுமலையில், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில், சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, கலைநிகழ்ச்சிகள் நடத்தியும், இனிப்புகள் வழங்கியும் அனைவரிடையே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.l உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் இனியன்ஞானப்பிரகாசம், தேசியக்கொடியை ஏற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் வஞ்சிமுத்து, ஆசிரியர் கார்த்திகா ஆகியோர் சுதந்திர வரலாறு குறித்து பேசினர்.
முன்னாள் மாணவர் சங்க அமைப்பினர், கடந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, ரொக்கப்பரிசு அளித்தனர். இதேபோல, 6 முதல் 12ம் வகுப்பு வரை, முதல் இடைப்பருவத்தேர்வில் முதலிடம் வென்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. முன்னாள் ராணுவவீர் நல சங்கத்தலைவர் ராமலிங்கம், ஆசிரியர்கள் சின்னராசு, விஜயலட்சுமி, தைலியண்ணன், ராஜேந்திரன், கெஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.l சின்னவீரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், மாணவ, மாணவியர் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஊராட்சித்தலைவர் கலாவதி, கொடியேற்றினார். வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து பேசினார். டாக்டர் வெங்கடேஷ், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில், 75 மாணவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களைப்போல் வேடமிட்டு, 75 வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில், மைதானத்தில் அணிவகுத்து நின்று அசத்தினர்.
உடுமலை, கிளை நுாலகம் எண் 2ல் நடந்த விழாவுக்கு, வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். நுாலகர் கணேசன் வரவேற்றார். ஆலோசகர் அய்யப்பன் கொடியேற்றினார். முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்கத்தலைவர், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.l குருவப்பநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் சந்திரசேகர் தலைமையில், ஊராட்சித்தலைவர் தமிழ்ச்செல்வி, கொடியை ஏற்றினார்.l ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் திலகாம்பாள், தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு இடம் பெற்றது. தேசிய மாணவர் கூட்டுப்படையில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவியருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.l மடத்துக்குளம், சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சரவணன், தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் புவனேஷ்வரி, வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன், ரேவதி உட்பட பலர் பங்கேற்றனர்.l அமராவதி சைனிக் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், பள்ளி முதல்வர் நிர்மல்ரகு, தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தலைவர்களின் தியாகம், இந்திய ராணுவத்தின் செயல்பாடு குறித்து பேசினார். துணை முதல்வர் தீப்திஉபாத்யாயா, ஆசிரியர் பால்ராஜ், நிர்வாகம் மற்றும் என்.சி.சி., ஊழியர்கள், கேடட்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.l கொடிங்கியம் ஆர்.கே.ஆர்., ஞானோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஊராட்சித்தலைவர் கிருஷ்ணவேணி கொடி ஏற்றினார். மாணவ, மாணவியர் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுப்படுத்தும் வகையில் வேடமிட்டு அசத்தினர். ஆர்.கே.ஆர்., கல்விக் குழுமங்களின் தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், முதல்வர் மஞ்சுளாதேவி உட்பட பலர் பங்கேற்றனர். உடுமலை, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பெரியகோட்டை ஊராட்சித்தலைவர் பேச்சியம்மாள், கொடி ஏற்றினார். முன்னதாக, முதல்வர் மாலா, வரவேற்றார்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் கலிலுார்ரகுமான் தலைமையில், சின்னவீரன்பட்டி ஊராட்சித்தலைவர் கலாவதி, துணைத்தலைவர் வீராத்தாள் கொடியை ஏற்றினர்.l வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில், முதல்வர் பிரபாகர் கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படையின் அணிவகுப்பும் இடம் பெற்றது. சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லுாரியில், கல்லுாரி ஆலோசகர் மஞ்சுளா, கொடி ஏற்றினார். முதல்வர் நாட்டுத்துரை, சுதந்திர இந்தியாவின் வரலாறு குறித்து பேசினார். ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், தலைமையாசிரியர் சாவித்திரி தலைமையில், ஊராட்சித்தலைவர் சுமதி, கொடி ஏற்றினார். மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் மற்றும், ஆசிரியர் கண்ணபிரான், ராகல்பாவி இளைஞர் நற்பணி மன்ற நண்பர்கள் சின்னதுரை, சவுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.