இதே நாளில் அன்று

Added : ஆக 15, 2022 | |
Advertisement
ஆகஸ்ட் 16, 2018 மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதிக்கு மகனாக, 1924 டிசம்பர், 25ல் பிறந்தவர் அடல்பிகாரி வாஜ்பாய். இவர், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், அரசியல் அறிவியலில் பட்டங்கள் பெற்றார்; 1942ல், சுதந்திர போரில் பங்கேற்று சிறை சென்றார்; பின், பாரதிய ஜனசங்கத்தில் சேர்ந்து போராடினார். பிரபல பத்திரிகைகளில் பணியாற்றினார்.முதன்


இதே நாளில் அன்று


ஆகஸ்ட் 16, 2018



மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதிக்கு மகனாக, 1924 டிசம்பர், 25ல் பிறந்தவர் அடல்பிகாரி வாஜ்பாய். இவர், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், அரசியல் அறிவியலில் பட்டங்கள் பெற்றார்; 1942ல், சுதந்திர போரில்
பங்கேற்று சிறை சென்றார்; பின், பாரதிய ஜனசங்கத்தில் சேர்ந்து போராடினார். பிரபல பத்திரிகைகளில் பணியாற்றினார்.முதன் முதலாக, 1957 லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூர் தொகுதியில், பாரதிய ஜன சங்க வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி., ஆனார். தொடர்ந்து வெவ்வேறு தொகுதிகளில் எம்.பி., ஆனார். 1977ல், வெளியுறவு துறை அமைச்சரானார். பா.ஜ., உருவான பின், அதன் தலைவர், பார்லிமென்ட் கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரானார். 1996ல், 13 நாட்கள், 1998 முதல் 13 மாதங்கள், 1999 அக்., 31 முதல் 2004 மே, 13 வரை என, மூன்று முறை பிரதமரானார்.
பிரதமராகி, டில்லி - லாகூர் பஸ் சேவை, பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர், முதலீடு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, சாலை போக்குவரத்தில் சாதித்தார். 'பாரத ரத்னா' உள்ளிட்ட விருதுகளை பெற்ற வாஜ்பாய், 2018ல் இதேநாளில், தன், 93வது வயதில் மறைந்தார்.
வாழ்நாளில் பாதியை பார்லிமென்டில் கழித்த தேசியவாத கவிஞரின் நினைவு தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X