அமுத பெருவிழா கோலாகலம்: ரூ. 73 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Added : ஆக 15, 2022 | |
Advertisement
ஊட்டி:ஊட்டியில் நடந்த, 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சியில், 73 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாட்டின், 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி, ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அம்ரித் தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 90 பேருக்கு சான்றிதழ்
அமுத பெருவிழா கோலாகலம்: ரூ. 73 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஊட்டி:ஊட்டியில் நடந்த, 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சியில், 73 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாட்டின், 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி, ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அம்ரித் தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 90 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின், வருவாய், தோட்டக்கலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தாட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த, 20 பயனாளிகளுக்கு, 73 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, துானேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின், தேசப்பற்று குறித்த கலை நிகழ்ச்சி; அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் மாணவிகளின் பெண் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம்; ஊட்டி கிரசன்ட் பள்ளி மாணவிகளின் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' தொடர்பான கலைநிகழ்ச்சி; சிலம்பாட்டம், போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நீலகிரி பழங்குடி மக்களின் கலாசார நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, எஸ்.பி., ஆசிஷ் ராவத், ஆர்.டி.ஓ., துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X