தேசம் முழுக்க தேசப்பற்று; வீடுதோறும் சுதந்திர கொண்டாட்டம்

Added : ஆக 15, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.பிரதமர் நரேந்திரமோடி, 'சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் தங்களுடைய புகைப்படங்களுக்கு பதிலாக, தேசிய கொடியை வைக்க வேண்டும்; வரும், 13 முதல் நேற்று 15ம் தேதி வரை அனைத்து வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விட
தேசம் முழுக்க தேசப்பற்று; வீடுதோறும் சுதந்திர கொண்டாட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.பிரதமர் நரேந்திரமோடி, 'சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் தங்களுடைய புகைப்படங்களுக்கு பதிலாக, தேசிய கொடியை வைக்க வேண்டும்; வரும், 13 முதல் நேற்று 15ம் தேதி வரை அனைத்து வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும்,' என, தெரிவித்தார்.அதன்படி, பலரும் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களுக்கு பதிலாக, தேசியக்கொடியை வைத்துள்ளனர். பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில், தேசியக்கொடி பறக்கவிடப்பட்டன. வீடுகள் முன் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை மக்கள் வெளிப்படுத்தினர்.பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் சுதந்திரம் கிடைக்க போராடிய தியாகிகளின் படங்கள் பதித்த பிளக்ஸ் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.l பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், தேசியக்கொடியேற்றினார். வருவாய்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை, நிகழ்ச்சிகள் நடைபெற்றன.l நகராட்சி அலுவலகத்தில், தலைவர் சியாமளா தேசியக்கொடியேற்றினார். கமிஷனர் தாணுமூர்த்தி, துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளரான திருநங்கை சோபியா கிருஷ்ணன் உள்ளிட்ட, 10 துாய்மை பணியாளர்கள்; இரண்டு வருவாய் உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர்.l நெகமம் ஜக்கார்பாளையம் எம்.என்.எம்., உயர்நிலைப்பள்ளி, ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் மற்றும் சிறுகளந்தை லயன்ஸ் கிளப் சார்பில், சுதந்திர பவளவிழா ஆண்டை முன்னிட்டு, 75 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியை ஏந்தி, பள்ளி வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.l பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில், பேரவை தலைவர் நடராஜ், தேசியக்கொடியேற்றினார். பள்ளி, மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வட்டார சிறு வியாபாரிகள் சங்கம், கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கம் சார்பில் தேசியக்கொடியேற்றி கொண்டாடினர்.l சக்ஸஸ் லயன்ஸ் கிளப் சார்பில், அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நகராட்சி துாய்மை பணியாளர்கள், 22 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.l நகர பா.ஜ., சார்பில், வெங்கடேசா காலனி வள்ளலார் வீதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மகள் துளசியை ராணுவத்துக்கு அனுப்பிய தாய் ஷீலா, தேசியக்கொடியேற்றினார். சுதந்திர போராட்ட வீரர் சுப்பையாவின் பேரன் ஹரிஹரசுதன், பா.ஜ., மூத்த நிர்வாகி நஞ்சப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.l கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில் சுதந்திர தின விழா, காங்., கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி, தேசியக்கொடியேற்றினார். கட்சியின் நகர தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். நகரம் மற்றும் ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடியேற்றப்பட்டது.l கோவை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஐந்து இடங்களில் தேசியக்கொடியேற்றப்பட்டன.l பொள்ளாச்சி எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் நடந்த விழாவில், தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முகவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி கிளை மேலாளர் சந்திரமோகன், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.l சதுரங்க சங்கம் சார்பில் நடந்த விழாவில், செயலாளர் பரமேஸ்வரன் வரவேற்றார். தலைவர் கருணாநிதி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர், மாணவ, மாணவியருக்கு நோட்டு மற்றும் எழுதும் பொருட்களை வழங்கினார்.l கிணத்துக்கடவில், காங்., வட்டாரத்தலைவர் சிவராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தனர்.l கோவை தெற்கு மாவட்ட காங்., மனித உரிமை பிரிவு சார்பில், பாத யாத்திரை, பொள்ளாச்சியில் நடந்தது. மாவட்ட செயலாளர் அன்சர்பாய் வரவேற்றார். மனித உரிமை மாநில செயலாளர் பஞ்சலிங்கம் தலைமை வகித்தார். பாத யாத்திரையை, முன்னாள் மாவட்ட தலைவர் சக்திவேல் துவக்கி வைத்தார். பஸ்ஸ்டாண்டில் பாத யாத்திரையை நிறைவு செய்து, காந்தி சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.l பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு தலைவர் லட்சுமி தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பி.டி.ஓ., ஜென்கின்ஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரம்யாகுமாரி, ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.l ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில், வால்பாறை டி.எஸ்.பி., கீர்த்திவாசன் தலைமையில் தேசியக்கொடியேற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உடனிருந்தார். கொடியேற்றம் முடிந்ததும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.l ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை தலைமையில் கொடியேற்றப்பட்டு, சுகாதாரத்தில் மக்களின் பங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.l ஆனைமலை வனத்துறை அலுவலகத்தில், வனச்சரக அலுவலர் புகழேந்தி தேசியக்கொடியேற்றினார். வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் பானுமதி தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.l கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று, பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், ரத்த தான முகாம் நடத்தப்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.l கோட்டூர் பகுதியில், நகர பா.ஜ., தலைவர் ரமேஸ் மற்றும் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவர் ஜெயராஜ் தலைமையில் கொடியேற்றம் மற்றும் வாகன பேரணி நடந்தது.l வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, மேலாளர் சலாவுதீன், கவுன்சிலர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக மாணவர்கள், 75வது ஆண்டு சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில், அணிவகுத்து நின்று அசத்தினர். மாணவர்கள், தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு காந்திசிலை வளாகம் வரை பேரணியாக சென்றனர்.l வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் செந்தில்குமார், தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். வருவாய்த்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.l நகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் பாலு முன்னிலையில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து காந்திசிலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில், துாய்மை பணியாளர் சின்னமணியம்மாள் தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி மேலாளர் சலாவுதீன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.l வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கற்பகம் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், தங்கராஜ், பாலாஜி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.l வால்பாறை நகர காங்., கட்சி சார்பில் நடந்த விழாவுக்கு வடக்கு வட்டாரத்தலைவர் அமீர் தலைமை வகித்தார். நகர தலைவர் பேபி, தெற்கு வட்டாரத்தலைவர் பிரபாகரன் ஆகியோர் காந்திசிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X