தலைகீழாக தேசியக் கொடி ஏற்றிய கும்பகோணம் மேயர்

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தஞ்சாவூர் : கும்பகோணம் மாநகராட்சியின் சுதந்திர தின கொண்டாட்டத்தில், தேசியக் கொடியை மேயர் தலைகீழாக ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில், தி.மு.க.,வை சேர்ந்த துணை மேயர் தமிழழகன், கமிஷனர் செந்தில் முருகன் முன்னிலையில், மாநகராட்சியின் முதல் மேயரான காங்கிரஸ் கட்சியை
தலைகீழாக தேசியக் கொடி ஏற்றிய கும்பகோணம் மேயர்

தஞ்சாவூர் : கும்பகோணம் மாநகராட்சியின் சுதந்திர தின கொண்டாட்டத்தில், தேசியக் கொடியை மேயர் தலைகீழாக ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில், தி.மு.க.,வை சேர்ந்த துணை மேயர் தமிழழகன், கமிஷனர் செந்தில் முருகன் முன்னிலையில், மாநகராட்சியின் முதல் மேயரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் தேசியக் கொடி ஏற்றினார்.தேசியக் கொடி கம்பத்தின் உச்சிக்கு சென்று பறந்த போது, கொடி தலைகீழாக இருப்பதை அறிந்தனர். உடனே, அவசர அவசரமாக கொடி இறக்கப்பட்டு, மீண்டும் சரியான முறையில் பறக்க விடப்பட்டது.

கமிஷனர்கள், பள்ளி மாணவ - மாணவியர், மாநகராட்சி ஊழியர்கள் என பலரும் பங்கேற்ற நிகழ்வில், மாநகராட்சி மேயர், தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த, 'வீடியோ' பரவி வருவதால், பா.ஜ., கட்சியினர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மேயருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
16-ஆக-202215:02:41 IST Report Abuse
thamodaran chinnasamy இவர்களைப்பற்றி கருத்துக்கூறி எங்களின் தரத்தைத்தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஆக-202206:15:45 IST Report Abuse
D.Ambujavalli ஒரு முறை ஏற்றி, உடனே இறக்கி, என்று எத்தனை அவமதிப்பு தேசீயக்கொடிக்கு திமுகவின் அபார தேசபக்தி
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
16-ஆக-202202:12:44 IST Report Abuse
BASKAR TETCHANA காங்கிரகாரன் புத்தியே தலைகீழாக தான் இருக்கும். இதற்க்கு துணை தி.மு.க காரன். இவர்களுக்கு மண்டையில் மசாலா இல்லை .அதனால் தான் தேசிய கொடியின் மதிப்பு தெரியாமல் தலை கீழாக ஏற்றி உள்ளனர். இவனெல்லாம் மேயர் சமமிழ்நர் வேறு. படித்த முட்டாள்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X