உலகப்போரில் ஒலித்த சங்கு; 42 ஆண்டுகளுக்கு பின் உயிர்

Added : ஆக 15, 2022 | |
Advertisement
தஞ்சாவூர் : தஞ்சாவூரில், இரண்டாம் உலகப்போரின் போது, பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக ஒலித்த சங்கு, 42 ஆண்டுகளுக்கு பின் பழுது நீக்கி, நேற்று மீண்டும் ஒலித்தது.இரண்டாம் உலகப்போரின் போது, 1939 முதல், 1945 வரையிலான காலக்கட்டத்தில், இரவு நேரங்களில் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.அப்போது, போர் விமானங்களுக்கு, நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக, விளக்குகள்
உலகப்போரில் ஒலித்த சங்கு; 42 ஆண்டுகளுக்கு பின் உயிர்

தஞ்சாவூர் : தஞ்சாவூரில், இரண்டாம் உலகப்போரின் போது, பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக ஒலித்த சங்கு, 42 ஆண்டுகளுக்கு பின் பழுது நீக்கி, நேற்று மீண்டும் ஒலித்தது.

இரண்டாம் உலகப்போரின் போது, 1939 முதல், 1945 வரையிலான காலக்கட்டத்தில், இரவு நேரங்களில் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.அப்போது, போர் விமானங்களுக்கு, நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக, விளக்குகள் அணைக்கப்படும்.சங்கு ஒலித்த உடன், விளக்குகள் அணைக்கப்பட வேண்டும் என்பது அரசு உத்தரவாக இருந்தது.தஞ்சாவூர் நகர மக்களை பாதுகாப்பதற்காக, இரண்டாம் உலகப்போரின் போது, இந்த சங்கு நிறுவப்பட்டது. இதை இயக்குவதற்காக ஒருவர் நியமிக்கப்பட்டார்.

போர் முடிவுற்று, 1967ம் ஆண்டுக்கு பின், பொதுமக்களுக்கு நேரத்தை தெரியப்படுத்தும் வகையில், தினமும் காலை 10:00 மணி, மதியம் 1:00 மணி, மாலை 5:00 மணி என மூன்று முறை ஒலித்தது.கடந்த, 1980ம் ஆண்டுக்குப் பின், இந்த சங்கு செயல்பாடு இன்றி போனது. புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி நிர்வாகம், பழைய சங்கை சீரமைத்து, நேற்று ஒலிக்க வைத்தது. இதற்கான நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ராமநாதன், கமிஷனர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X