விருது பணம் ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கு தந்தார் நல்லக்கண்ணு

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை : சுதந்திர தின விழாவில், 'தகைசால் தமிழர் விருது' பெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கு விருதுடன் வழங்கப்பட்ட, 10 லட்சம் ரூபாயுடன், தன் பணம் 5,000 ரூபாயை சேர்த்து, 10.05 லட்சம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு, அதே மேடையில் வழங்கி, அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு டிச., 25ல் பிறந்தவர்
Thagaisal Thamizhar, award, Nallakannu, நல்லக்கண்ணு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : சுதந்திர தின விழாவில், 'தகைசால் தமிழர் விருது' பெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கு விருதுடன் வழங்கப்பட்ட, 10 லட்சம் ரூபாயுடன், தன் பணம் 5,000 ரூபாயை சேர்த்து, 10.05 லட்சம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு, அதே மேடையில் வழங்கி, அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.

திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு டிச., 25ல் பிறந்தவர் நல்லக்கண்ணு. தன் பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கடந்த 1943ல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். கம்யூனிஸ்ட் கட்சி 1948ல் தடை செய்யப்பட்டபோது தலைமறைவானார். ஜாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும், 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலராகவும் பணியாற்றி உள்ளார். இவரது 80வது பிறந்த நாளை ஒட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்கொடை வசூலிக்கப்பட்டு, 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அந்த தொகையை, அந்த மேடையிலேயே கட்சிக்கு திருப்பிக் கொடுத்தார்.


latest tamil news



கடந்த 2008ல், தமிழக அரசு, அம்பேத்கர் விருதுடன் 1 லட்சம் ரூபாய் வழங்கியது. இதில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்தார்.தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும், பெரும் பங்களிப்பை வழங்கிய நல்லக்கண்ணுவுக்கு, 2022ம் ஆண்டுக்கான, தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டது. நேற்று கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், நல்லக்கண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

விருதுத் தொகையாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட நல்லக்கண்ணு, அத்துடன் தன் பணம் 5,000 ரூபாய் சேர்த்து, 10.05 லட்சம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்காக, முதல்வரிடம் வழங்கினார்.தனக்கு வழங்கப்பட்ட விருது தொகையை, அதே மேடையில் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியதாக அறிவிக்கப்பட்டதும், பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி, பாராட்டு தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-202211:02:47 IST Report Abuse
ஆரூர் ரங் வாங்கின 10 கோடியில் ஒரு சதவீதத்தை திருப்பிக் கொடுத்து 🙃பெரிய தியாகியாவது சுலபம் .
Rate this:
Cancel
16-ஆக-202211:01:14 IST Report Abuse
ஆரூர் ரங் இவரது நல்லக்கண்ணுவின் இரு மகள்களும் நன்கு சம்பாதிக்கின்றனர் . அவர்கள் வீட்டில் இவருக்கு இடமில்லாமல் அரசு வீட்டைக் கேட்டு வாங்கினார் இவரது கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் கட்டியுள்ள எட்டு மாடி கட்டிடத்திலும் பெரும்பாலான இடத்தை அந்நிய மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர் ஆனால் இவருக்கு வசிக்க சிறிய இடம் கூட அதில்😛 இல்லையாம். நல்ல தியாகமடா இது.
Rate this:
Cancel
Sureshkumar - Coimbatore,இந்தியா
16-ஆக-202209:52:23 IST Report Abuse
Sureshkumar மாமனிதர்.
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
17-ஆக-202208:51:31 IST Report Abuse
FastrackMango Man ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X