அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ வழங்கிய பஞ்., தலைவர்

Added : ஆக 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
தஞ்சாவூர் : பேராவூரணி அருகே, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் போக்கு வரத்து வசதிக்காக, ஆட்டோ வழங்கிய பஞ்சாயத்து தலைவரை, பலரும் பாராட்டினர்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் செல்வன், 43. லண்டனில் வேலை பார்த்த இவர், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பஞ்சாயத்து தலைவரானார்.இந்நிலையில், நாடியம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ வழங்கிய பஞ்., தலைவர்

தஞ்சாவூர் : பேராவூரணி அருகே, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் போக்கு வரத்து வசதிக்காக, ஆட்டோ வழங்கிய பஞ்சாயத்து தலைவரை, பலரும் பாராட்டினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் செல்வன், 43. லண்டனில் வேலை பார்த்த இவர், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பஞ்சாயத்து தலைவரானார்.இந்நிலையில், நாடியம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிளிலும், நடந்தும் செல்கின்றனர்.அவர்களின் வசதிக்காக, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆட்டோவை, பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமியிடம் பிரேம் செல்வன் வழங்கினார்.

பிரேம் செல்வன் கூறியதாவது:பள்ளியில் 10ம் வகுப்பில், முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 5,000 ரூபாய், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 4,000 ரூபாய் வழங்கி வருகிறேன். பெற்றோரை இழந்த மாணவ - மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறேன். மேலும், காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, கூழ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, ஆட்டோ ஒன்றை வழங்கியுள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஆக-202206:09:09 IST Report Abuse
D.Ambujavalli இம்மாதிரி அமைதியாக நல்லவை செய்ப்பவர்கள் உள்ள இடத்தில்தான் உண்மை என்பதையே மறந்து கண்டபடி வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வருபவர்கள் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X