இஞ்ஞாசிமுத்துவுக்கு 'அப்துல் கலாம்' விருது

Added : ஆக 15, 2022 | |
Advertisement
சென்னை : சுதந்திர தின விழாவில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி இஞ்ஞாசிமுத்துவுக்கு, டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.தேனி மாவட்டத்தில் உள்ள, டி.சிந்தலச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இஞ்ஞாசிமுத்து. திருநெல்வேலி, பாளையங்கோட்டை துாய சவேரியார் கல்லுாரியில் உள்ள, சவேரியார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.அறிவியல் மீதான ஆர்வம், கடின உழைப்பு மற்றும்
இஞ்ஞாசிமுத்துவுக்கு 'அப்துல் கலாம்' விருது

சென்னை : சுதந்திர தின விழாவில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி இஞ்ஞாசிமுத்துவுக்கு, டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள, டி.சிந்தலச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இஞ்ஞாசிமுத்து. திருநெல்வேலி, பாளையங்கோட்டை துாய சவேரியார் கல்லுாரியில் உள்ள, சவேரியார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.அறிவியல் மீதான ஆர்வம், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி காரணமாக, புகழ் பெற்ற விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளார். கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையின் பேராசிரியர்களால், தாவர உயிரியல் துறையில், உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகளில் ஒருவராக, இந்தியாவில் 10வது சிறந்த விஞ்ஞானியாக, அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர், டில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் அகாடமி உறுப்பினராக உள்ளார். முன்னணி அறிவியல் இதழ்களில், 700க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இதுவரை 31க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி புதுப்பித்துள்ளார். இவரது வெளியீடுகள், 26 ஆயிரம் முறைக்கு மேலாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், முனைவர் பட்டம் பெற உதவி உள்ளார்.இவருக்கு, ஒன்பது இந்திய மற்றும் இரண்டு அமெரிக்க காப்புரிமைகள் உள்ளன. பூச்சிகளை கட்டுப்படுத்த, 'பொன்னீம்' என்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக் கொல்லியை உருவாக்கி உள்ளார்.

கொரோனா காலத்தில் உபயோகிக்க, குறைந்த விலையில் மூலிகை சானிடைசரை உருவாக்கினார். ஒரு பூச்சி இனம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. ஒரு இயற்கை மூலக்கூறுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை மற்றும் சென்னை பல்கலை துணைவேந்தராக இருந்துள்ளார். அவரது சேவையை பாராட்டும் விதமாக, 2022ம் ஆண்டுக்கான 'அப்துல் கலாம் விருது' வழங்கப்பட்டுள்ளது. நேற்று சுதந்திர தின விழாவில், அப்துல்கலாம் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, முதல்வர் பாராட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X