சென்னை வங்கிக் கொள்ளையன் முருகன் கைது!

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 15, 2022 | கருத்துகள் (42+ 30) | |
Advertisement
சென்னை : சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவத்தில், மேலும் 10 கிலோ தங்கத்தை போலீசார் விழுப்புரத்தில் பறிமுதல் செய்தனர்.சென்னை அரும்பாக்கம் ரசாக்
சென்னை, வங்கிக் கொள்ளையன் ,முருகன்,  கைது

சென்னை : சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவத்தில், மேலும் 10 கிலோ தங்கத்தை போலீசார் விழுப்புரத்தில் பறிமுதல் செய்தனர்.

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆக.,13ம் தேதி பட்டபகலில் மர்ம நபர்கள் நுழைந்தனர்.பணியில் இருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஊழியர்களை கட்டிப் போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின்படி அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமானது.
விசாரணையில் இதே வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வில்லிவாக்கம் கிளை மண்டல மேலாளராக தற்போது பணியாற்றும் பாடியைச் சேர்ந்த முருகன் 37, தன் கூட்டாளிகளுடன் 10 நாட்களாக திட்டமிட்டு கொள்ளையடித்தது தெரிய வந்தது.

கொள்ளை நடந்த 24 மணி நேரத்திற்குள் முருகன் மற்றும் கூட்டாளிகளான வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் 30, பாலாஜி 28, செந்தில் 30, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 8.5 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இரண்டு கார்கள் ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன .பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று காட்சிப்படுத்த பட்டன. இதனால் அந்த இடமே நகைக் கடை போல காட்சி அளித்தது. நகைகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். தனியார் வங்கி அதிகாரிகளை வரவழைத்து நகைக்குரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதனிடையே, இன்று மேலும் 10 கிலோ தங்கத்தை, தனிப்படை போலீசார ்விழுப்புரத்தில் பறிமுதல் செய்தனர்.
பின் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டி:


கொள்ளை நடந்த 20 நிமிடத்தில் வாடிக்கையாளர் வாயிலாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் வங்கியில் பணிபுரிந்த முருகன் என்பவரே கூட்டாளிகள் மூன்று பேருடன் கொள்ளையடித்தது தெரியவந்தது.கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகனை அடையாளம் கண்டதால் அவரது நடவடிக்கை குறித்து தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.அதேசமயம் கொள்ளையர்கள் தப்பி சென்ற பகுதிகளில் உள்ள 'சிசிடிவி கேமரா'க்களையும் ஆய்வு செய்தனர்; அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் முருகனின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளையும் வங்கி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதால் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற பத்து நாட்களாக ஆலோசித்து சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
மேலும் ஏழு பேர் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் பதுங்கி இருக்கும் இடம் தெரிந்து விட்டது; விரைவில் கைது செய்து விடுவோம்.சம்பவத்தில ஈடுபட்ட குற்றவாளிகள் மதுரவாயல், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் சுற்றினர்.

கொள்ளையடித்த நகைகளை இரு பங்காக பிரித்துள்ளனர். மீதமுள்ள நகைகள் முருகனிடம் இருக்கும் என தெரிகிறது.கூட்டாளிகளுடன் முருகன் வங்கிக்கு கொள்ளையடிக்க வரும்போது வாசலில் நின்ற காவலாளிக்கு மயக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் மயக்கம் அடையவில்லை. குளிபானத்தை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். சம்பவத்தின்போது வங்கியில் உள்ள அலாரம் ஒலிக்காதது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி தான் மாதம்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.


கொள்ளையர்களை பிடிக்கும் போலீசாருக்கு ஒரு லட்சம் பரிசை டி.ஜி.பி. அறிவித்துள்ளார். அத்தொகையை ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்க கேட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.முக்கிய குற்றவாளி முருகனை போலீசார் கொரட்டூர் பகுதியில் கைது செய்துள்ளதாக தெரிகிறது. எனினும் அதிகாரபூர்வமாக போலீசார் அறிவிக்கவில்லை. மீதமுள்ள நகைகளை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (42+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
16-ஆக-202213:17:31 IST Report Abuse
Mohan வங்கிக்கும் நகைகள் கிடைத்துவிட்டது. பிடித்த பொலீசாருக்கெல்லாம் 5லட்சம் பரிசு கொடுக்க போகிறார்கள். மொத்தத்தில் 5லட்சம் வரிப்பணம் இப்படி வீணாகிறது.இப்போ சொல்லுங்க யாருக்கு நட்டம். நமக்கு நாமமே.
Rate this:
Raj Kamal - Thiruvallur,இந்தியா
16-ஆக-202216:12:07 IST Report Abuse
Raj Kamalஇந்த வாய் தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாய்க்கு வந்ததை பேசும், பின் நடவடிக்கை எடுத்தால் குறை சொல்லும் என்னே விந்தையான மனிதர்கள்....
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
16-ஆக-202211:51:03 IST Report Abuse
Tamilan நாட்டில் உள்ள அணைத்து பள்ளிகளையும் மூடிவிடவேண்டும். பிள்ளைகளில் கொள்ளையடிக்க கற்றுகொடிக்கோறார்கள். படித்த பின்பும் படித்ததை வைத்து கொள்ளையடிக்க அரசியல் சட்ட அரசுகள் கற்றுக்கொடுக்கின்றன, அதற்காக சட்டங்கள் இயற்றுகின்றன .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஆக-202211:33:36 IST Report Abuse
Lion Drsekar ஒரு வாரத்துக்கு இந்த சீரியல் செய்தி ஓடும், பிறகு அடுத்த சீரியல், அமெரிக்காவில் இருந்து வந்த ஆடிட்டர் மற்றும் மனைவி கொலை சீரியல் முடிந்து விட்டது, இந்த மெகா சீரியல் சில நாட்கள் ஓடும், முன்பு கூறியது போல் திருடுவார்கள், சிறைக்கு செல்வார்கள் வெளியே வருவார்கள், மீண்டும் திருடுவார்கள், நாமும் சீரியல் பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும், ஜனநாயகத்தில் எழுதப்படாத விதி, இதற்க்கு காரணம் கல்வி, மனித நேயமற்ற காலப்போக்கு, சீரழிக்கும் போதை, சாராயம், சிறைச்சாலைகளில் வழங்கப்படும் வசதிகள், சட்டம் இது போன்றவர்களுக்கு மனஉளைச்சல், ஏற்படாவண்ணம் பாதுகாப்பது கயவர்களை அடித்தாலும் குற்றம் அடிக்கவில்லையேயிராலும் குற்றம் என்றால் என்னதான் செய்வது என்ற கேள்வி எழலாம், திருந்துவதற்கு வழி வகுக்கலாம், சுதந்திரத்துக்காக போராடியவர்கள் செக்கு இழுத்தனர் இன்று சிறைச்சாலை?? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X