கீழ்வேளூர் எழிலரசிக்கு 'கல்பனா சாவ்லா' விருது

Added : ஆக 15, 2022 | |
Advertisement
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசிக்கு, துணிவு மற்றும் சாகச செயலுக்கான, 'கல்பனா சாவ்லா விருது' வழங்கப்பட்டது.நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர், மேல வீதியை சேர்ந்தவர் எழிலரசி. நீச்சல் தெரியாத போதிலும், தண்ணீரில் தத்தளித்த, இரண்டு குழந்தைகளை காப்பாற்றி உள்ளார். கும்பகோணம் மற்றும் அம்மாள்சத்திரத்தைச் சேர்ந்த, இரண்டு குடும்பத்தின் குழந்தைகள்,
கீழ்வேளூர் எழிலரசிக்கு 'கல்பனா சாவ்லா' விருது

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசிக்கு, துணிவு மற்றும் சாகச செயலுக்கான, 'கல்பனா சாவ்லா விருது' வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர், மேல வீதியை சேர்ந்தவர் எழிலரசி. நீச்சல் தெரியாத போதிலும், தண்ணீரில் தத்தளித்த, இரண்டு குழந்தைகளை காப்பாற்றி உள்ளார். கும்பகோணம் மற்றும் அம்மாள்சத்திரத்தைச் சேர்ந்த, இரண்டு குடும்பத்தின் குழந்தைகள், பாட்டி சடங்குக்காக, தாத்தா வீட்டுக்கு வந்தனர். மூன்று குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவர் தவறுதலாக அருகில் இருந்த குளத்தில் விழுந்து, நீரில் மூழ்கிக் கொண்டு இருந்தனர். அ

வர்கள் சத்தம் கேட்டு, கோவிலுக்கு சென்று கொண்டிருந்த எழிலரசி, அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவரும் குளத்தில் விழுந்தார். எனினும், இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு, வெகு நேரம் குளத்தில் மன உறுதியுடன் போராடினார். அங்கு வந்த பொது மக்கள் உதவியுடன், மூவரும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

எழிலரசியின் வீரமான, துணிவான செயலை பாராட்டும் விதமாக, அவருக்கு 2022ம் ஆண்டுக்கான, 'கல்பனா சாவ்லா' விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று சுதந்திர தின விழாவில், அவருக்கு விருது மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X