கஞ்சா உற்பத்திக்கு முழு தடை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி, 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை, வளசரவாக்கம் மண்டலத்தில், வளசரவாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதிகளை இணைக்கும் வள்ளுவர் சாலையில், 20 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்க, அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று பூஜை போடப்பட்டது. அதில், மதுரவாயல்
Subramanian, DMK, minister,கஞ்சா

சென்னை : ''தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி, 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, வளசரவாக்கம் மண்டலத்தில், வளசரவாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதிகளை இணைக்கும் வள்ளுவர் சாலையில், 20 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்க, அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று பூஜை போடப்பட்டது. அதில், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், சுப்பிரமணியன் அளித்த பேட்டி: சென்னையில் இந்தாண்டு பருவ மழையின்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. தி.மு.க., ஆட்சி அமைந்து, 15 மாதங்களில் அதிக வழக்குகளை பதிவு செய்து, போதை பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். இது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட ஐந்து மடங்கு அதிகம்.


latest tamil newsதமிழகத்தில் கஞ்சா உற்பத்தி, 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக, ஆந்திராவில் இருந்து அதிகம் வருவதால், தமிழக போலீசார், அம்மாநிலத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்வதை கண்டறிந்து, தென் மாநில டி.ஜி.பி.,க்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர அரசு உடனே, 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடிகளை அழித்தது. இதுபோன்று அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
16-ஆக-202212:03:41 IST Report Abuse
raja அப்போ விடியல் வந்த ஒன்ற வருசமா உற்பத்தி பண்ணிக்கிட்டு தான் இருந்தானுவொளா கேடுகெட்ட விடியாமுஞ்சியின் உடன்பிறப்புக்கள்.....
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
16-ஆக-202210:48:46 IST Report Abuse
 Ganapathy Subramanian "தி.மு.க., ஆட்சி அமைந்து, 15 மாதங்களில் அதிக வழக்குகளை பதிவு செய்து, போதை பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். இது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட ஐந்து மடங்கு அதிகம்" - நடமாட்டமே உங்கள் ஆட்சியில்தான் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். நீங்கள் என்னடாவென்றால் அதிமுக ஆட்சியில் நடவடிக்கையே எடுக்கவில்லை என்கிறீர்கள். அவர்கள் ஆளே இல்லாத ஊர் என்பதால் டீக்கடையே போடவில்லை. நீங்கள் போதை வியாபாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டர்கள் என்று எல்லோருக்கும் தெரிந்ததால் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. நீங்களும் 2% வியாபாரிகள் மேல் கேஸ் போடுகிறீர்கள். மாரிதாஸ், கிஷோர் மேல் எல்லாம் குண்டாஸ் போட முடிந்த உங்களால் இவர்கள் மேல் குண்டாஸ் போட முடியவில்லையா? ஓ, குருமா கட்சிக்காரர்கள் என்பதால் குருமா கோவித்துக்கொள்வார் என்ற அச்சமா?
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
16-ஆக-202209:05:40 IST Report Abuse
சீனி டாஸ்மாக் குடியை விட கஞ்சா அவ்வளவு மோசமில்லை, கஞ்சா புகைப்பது கண்டிப்பாக கேடானது தான். ஆனால், சிபிடி என்ற கஞ்சா செடியின் இலை, பூக்களில் இருந்து சத்து பானம் தயாரித்து, இதர மதுபானங்களுக்கு மாற்றாக சில வளர்ந்த நாடுகளில் இந்த சிபிடி கஞ்சா குளிர்பானம், டீ முதலானவை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்கிறார்கள். இது முழு போதையை தராது, ஆனால் குடிக்கு அடிமையானவர்களும், கான்சர் போன்ற தீராத நோய் உள்ளவர்கள், வலியால் அவதிப்படுப்வர்கள், வயதான தூக்கம் வராத நோயாளிகளுக்கு உதவியாக இருக்கிறது, மேலும் உடலுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்தாது என்று அறிவியல் சொல்கிறது. எனவே இது குறித்து ஆராச்ச்சி செய்தால், கஞ்சா விளைவிக்கும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம்தான், ஆனால், அரசே கொள்முதல் செய்து, ஆவின் மாதிரி நிறுவனம் மூலம் பானம் தயாரிக்கவேண்டும். அதே போல் தென்னங்கள் கூட, டாஸ்மாக் அளவுக்கு பாதிப்பதில்லை என சொல்கிறர்கள். விவசாயிகள் வருமானம் பெருக இது குறித்து விவசாய பல்கலைகழகங்கள் ஆராய்ச்சி செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X