வைகை எக்ஸ்பிரசுக்கு 45வது 'ஹேப்பி பெர்த் டே'

Added : ஆக 16, 2022 | |
Advertisement
மதுரை : மதுரையில், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 45வது பிறந்த நாளையொட்டி, ஊழியர்கள், பயணியர் 'கேக்' வெட்டிக் கொண்டாடினர்.வைகை எக்ஸ்பிரஸ் ரயில், 1977, ஆக., 15 முதல், சென்னை - மதுரை இடையே இயங்கி வருகிறது. ஆண்டுக்கு, 3.65 லட்சம் கி.மீ., பயணிக்கிறது. அன்றைய காலகட்டத்தில், மீட்டர்கேஜ் பாதையில், மணிக்கு 105 கி.மீ., வேகத்தில் சென்று, ஆசியாவிலேயே அதிவேக ரயில் என்ற பெருமை பெற்றது.இந்த ரயிலுக்கு,
Vaigai Express, train

மதுரை : மதுரையில், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 45வது பிறந்த நாளையொட்டி, ஊழியர்கள், பயணியர் 'கேக்' வெட்டிக் கொண்டாடினர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயில், 1977, ஆக., 15 முதல், சென்னை - மதுரை இடையே இயங்கி வருகிறது. ஆண்டுக்கு, 3.65 லட்சம் கி.மீ., பயணிக்கிறது. அன்றைய காலகட்டத்தில், மீட்டர்கேஜ் பாதையில், மணிக்கு 105 கி.மீ., வேகத்தில் சென்று, ஆசியாவிலேயே அதிவேக ரயில் என்ற பெருமை பெற்றது.இந்த ரயிலுக்கு, நேற்று 45வது பிறந்த நாள். இதையொட்டி, காலை 6:00 மணிக்கு, ரயிலுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்களுடன், பயணியர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த ரயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 'லோகோ பைலட்' அய்யலு, ''ஆரம்ப காலத்தில், ஒன்பது பெட்டிகளுடன் இயங்கிய வைகை எக்ஸ்பிரஸ், தற்போது நவீன வசதி கொண்ட 24 பெட்டிகளில், தினமும் இரண்டாயிரம் பயணியருடன் பயணிக்கிறது,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X