ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெறும்: ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை : ''மொழி, ஜாதி, சமயம் மற்றும் இனங்களைக் கடந்து, ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, நம் பாரதம் பல துறைகளில் வளர்ச்சி பெற்று, உலகத்தில் தலைசிறந்த நாடாக திகழும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்தார்.சென்னையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில், தேசியக் கொடி ஏற்றி வைத்து, அவர் பேசியதாவது:கடந்த 15 நாட்களாக, நாட்டில்
RSS,General Secretary, Dattatreya, Dattatreya Hosabale

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''மொழி, ஜாதி, சமயம் மற்றும் இனங்களைக் கடந்து, ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, நம் பாரதம் பல துறைகளில் வளர்ச்சி பெற்று, உலகத்தில் தலைசிறந்த நாடாக திகழும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்தார்.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில், தேசியக் கொடி ஏற்றி வைத்து, அவர் பேசியதாவது:கடந்த 15 நாட்களாக, நாட்டில் உத்வேகம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக, அனைத்து வீடுகளிலும், தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சமூக வலைதளங்களில், தேச பக்தி, தேசிய உணர்வுகள் குறித்த கருத்துகள் சிறப்பாக இடம் பெற்றன. அன்னியரை எதிர்த்து சுதந்திரம் பெற, பாரத நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து போராடி உள்ளனர். அவர்களை நினைவுகூர்வது மிகுந்த மகிழ்ச்சி.

விடுதலைப் போரில், தமிழகத்தை சேர்ந்தவர்களின் பங்கு பெரிது. பாரதியார், சத்தியமூர்த்தி, நம் வீரத்தாய் குயிலி, வீரமங்கை வேலு நாச்சியார், முத்துராமலிங்க தேவர் என ஏராளமானோரின் பங்கு மிகப் பெரியது. பாலகங்காதர திலகர், காந்தி, வீரசாவர்கர், அரவிந்தர் போன்றவர்களின் உத்வேகத்தால், தமிழகத்தில் இருந்து பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர்.


latest tamil newsநம் நாடு உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. நம் முன்னோரின் தியாகம், போராட்டங்கள் குறித்து, அடுத்து வரும் இளைய சமுதாயத்திற்கு, அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டும். நம் நாடு, உலகத்துக்கு கொடுக்கக் கூடிய கொடைகள் அதிகம். யோகா வழியே உலகத்திற்கே வழிகாட்டியாக திகழ்கிறது. தொழில் நுட்பம், ஆயுர்வேதம், சமஸ்கிருதம், நம் குடும்ப அமைப்பு முறை, கலை, கலாசாரங்கள் ஆகியவற்றையும், உலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்கின்றனர். வேற்றுமையில் பிரிவு என்பது கிடையாது. நம் நாட்டில், ஜனநாயகம் சிறப்பாக இருக்கிறது. மொழி, ஜாதி, சமயம் மற்றும் இனங்களைக் கடந்து ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, நம் பாரதம் பல துறைகளில் வளர்ச்சி பெற்று, உலகத்தில் தலைசிறந்த நாடாக திகழும். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாசாரம் எனும் உறுதியுடன் இந்த நாளைக் கொண்டாடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-202212:55:28 IST Report Abuse
விஜய் யார் நீ....?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
16-ஆக-202212:04:51 IST Report Abuse
J. G. Muthuraj இப்பவே உலகில் தலைசிறந்த நாடாகத்தான் இருக்கிறது.. அதில் சந்தேகமில்லை.. எவைகளில் தலைசிறந்துள்ளது? கலாச்சாரத்தில் பன்முகத்தன்மை, அனைத்து மதங்களையும் சமமாக மதித்து நடத்துவது, உலகில் பெரிய ஜனநாயக நாடு, உலக நாடுகளிலேயே 448 விதிகளைக்கொண்ட நீண்ட இந்திய அரசியல் சாசனம் என்ற மெடல்கள் இந்தியாவுக்கு இருக்கிறதே...இந்த வளர்ச்சிப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம்....
Rate this:
16-ஆக-202212:24:08 IST Report Abuse
Nagendran,Erode ...பெங்களூர்ல இருக்கிறவிங்களுக்கு தேசப் பற்று கொஞ்சமாச்சும் வருது....
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
16-ஆக-202210:02:48 IST Report Abuse
nizamudin சரியாக சொன்னார் /ஒருவரை ஒருவர் விமர்சிப்பதும் தாக்கி கொள்வதும் நாட்டை பிளவு படுத்திவிடும் /மத ஒற்றுமை இந ஒற்றுமை தேசத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் /நம்மை ஆசிர்வதிக்க பல மதங்களை சார்ந்த கடவுள்கள் நம்மிடம் உள்ளனர் /இந்த பாக்கியம் வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது /தேசத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் /மறப்போம் மன்னிப்போம் கடந்து வந்த காலங்களை /நாம் அனைவரும் இங்கு வறுமையிலும் வேதனையிலும் வாழ்ந்து வருகிறோம் /கல்வி மருத்துவம் செலவுகள் உச்சம் /விலைவாசி உயர்வுகள் நம்மை மரணத்திற்கு தள்ளி வருகின்றன /1948 ல் இருந்த பாரதம் போல உருவாக்குவோம் /வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பாரத நாட்டை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X