நீதி வழங்குவதில் சமபங்கு : தலைமை நீதிபதி பெருமிதம்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி :''அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை உறுதி செய்வதில் நிர்வாகம், பார்லிமென்ட், நீதித்துறை ஆகிய மூன்றும் சமபங்கு வகிக்கின்றன,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி, உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா மூவர்ண கொடியை ஏற்றி நேற்று உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது: நீதித்துறையின்
 நீதி வழங்குவதில் சமபங்கு :   தலைமை நீதிபதி பெருமிதம்

புதுடில்லி :''அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை உறுதி செய்வதில் நிர்வாகம், பார்லிமென்ட், நீதித்துறை ஆகிய மூன்றும் சமபங்கு வகிக்கின்றன,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி, உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா மூவர்ண கொடியை ஏற்றி நேற்று உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:


latest tamil news



நீதித்துறையின் வாயிலாக தங்களுக்கான நீதியும், நிவாரணமும் கிடைக்கும் என மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். பிரச்னையை மக்கள் எதிர்கொள்ளும் மன வலிமையை நீதித்துறை
அளிக்கிறது. எந்த நிலையிலும் நீதித்துறை அவர்களுக்காக துணை நிற்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான இந்தியாவின் அரசியலமைப்பை உச்ச நீதிமன்றம்பாதுகாக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்றது முதல், தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு நீதித்துறை வலு சேர்த்துள்ளது.
நம் அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை உறுதி செய்வதில், நிர்வாகம், பார்லிமென்ட், நீதித்துறை ஆகியவற்றுக்கு சமபங்கு உள்ளது. ஒவ்வொரு அமைப்புக்கும் குறிப்பிட்ட கடமையை நம் அரசியலமைப்பு வழங்கி உள்ளது. அதில், நீதி வழங்கும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது என்ற கருத்தை அரசியலமைப்பின் சட்டவிதி 38 நிராகரிக்கிறது.
சமூக, பொருளாதார, அரசியல் நீதி வழங்கும் கடமை பார்லிமென்டுக்கு உள்ளது என அதில் குறிப்பிடுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
16-ஆக-202213:22:15 IST Report Abuse
Mohan ,,,,,
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
16-ஆக-202211:56:08 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN எப்பிடி இவிங்களுக்கெல்லாம் இதுமாறி பேச மனசு வருது ?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஆக-202209:14:24 IST Report Abuse
Sampath Kumar நீதி? அது பணக்காரனுக்கு அரசியல் வியாதிகளுக்கும் மட்டும் தான் சாமானிய மக்களுக்கு இல்லை என்று நீதிபதி அவரகள் புரிந்து கொள்ள வில்லை போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X