'டோர்னியர்' கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு பரிசு: சீனாவுக்கு சிக்கல்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
கொழும்பு :இருநாட்டு ராணுவ நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்தில், இலங்கை கடற்படையிடம், 'டோர்னியர்' கண்காணிப்பு விமானத்தை, இந்தியா நேற்று ஒப்படைத்தது.இந்தியா - இலங்கை இடையிலான ராணுவ நல்லுறவு ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டுக்கு தேவையான ராணுவ உபகரணங்கள், பயிற்சிகளை இந்தியா அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடற்பகுதிகளை கண்காணிக்கும், 'டோர்னியர் 228' என்ற கண்காணிப்பு
'டோர்னியர்' கண்காணிப்பு விமானம் இலங்கை  பரிசு: சீனா

கொழும்பு :இருநாட்டு ராணுவ நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்தில், இலங்கை கடற்படையிடம், 'டோர்னியர்' கண்காணிப்பு விமானத்தை, இந்தியா நேற்று ஒப்படைத்தது.இந்தியா - இலங்கை இடையிலான ராணுவ நல்லுறவு ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டுக்கு தேவையான ராணுவ உபகரணங்கள், பயிற்சிகளை இந்தியா அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடற்பகுதிகளை கண்காணிக்கும், 'டோர்னியர் 228' என்ற கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு அளிக்க, இந்தியா உறுதி அளித்து இருந்தது.
அதன்படி, கண்காணிப்பு விமானம் இலங்கை கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.


latest tamil news
கொழும்பு நகரின் காட்டுநாயகே என்ற இடத்தில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், கண்காணிப்பு விமானம் ஒப்படைக்கப்பட்டது.நம் விமானப் படையின் துணை தளபதி எஸ்.என்.கோர்மாடே, இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே ஆகியோர் விமானத்தை ஒப்படைத்தனர். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே கூறியதாவது:பரஸ்பர புரிதல், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால், இந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டோர்னியர் விமானம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் நட்பு நாட்டுக்கு பலம் சேர்ப்பதை, தங்களுக்கான பலமாக இந்தியா கருதுகிறது என்பதற்கு, இந்த பரிசு மிக சிறந்த உதாரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.சீனாவின் உளவு கப்பலான, 'யுவாங் வாங் 5' இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு இன்று வரவுள்ள நேரத்தில், இலங்கை கடற்படைக்கான கண்காணிப்பு விமானத்தை இந்தியா அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

****************

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-ஆக-202212:07:39 IST Report Abuse
Vamanan Nair இந்தியா விமானம் கொடுத்ததால் என்ன நடந்துவிடும். சீனா தனது கப்பலை உடனே திரும்ப அழைக்கப்போவதில்லை. அது நின்று உளவு பார்த்துக்கொண்டுதான் போகப்போகிறது. விமானமும் போச்சு ரகசியமும் போச்சு.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
16-ஆக-202211:28:08 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "இதுல என்ன ராஜதந்திரம்??"" நறுக் கேள்வி .....
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
16-ஆக-202211:55:14 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANகேட்டவர்கள்........
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
16-ஆக-202211:27:38 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "சீனாவின் உளவுக்கப்பல் அதி நவீனம்.. ஆனால் இந்தியா இலங்கைக்கு தானம் செய்த உளவு விமானம் அரத பழசு..." விஞ்ஞான உ.பி.ஸ். தேசப்பற்று கமெண்ட்டு .....
Rate this:
Suri - Chennai,இந்தியா
16-ஆக-202211:43:06 IST Report Abuse
Suriஇது மெய்யாலுமே உண்மை... உண்மை சொல்ல தேசப்பற்று ரொம்போ முக்கியம். இல்லாதது பொல்லாதது அவுத்து விடுவது... வாட்சப் பலக்லைக்கழக அறிவாளிக சாங்கி வர்ப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X