இது உங்கள் இடம்: விரைவில் விடை கிடைக்கும்!

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில், கருத்து தெரிவித்திருப்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.அதேபோல, தேர்தலில் அனைவரும்
Election Commission, Supreme Court, free, EC, SC

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்

ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில், கருத்து தெரிவித்திருப்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அதேபோல, தேர்தலில் அனைவரும் ஓட்டளிப்பதை கட்டாயமாக்க முடியாது என, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கூறியிருப்பது, சமூக ஆர்வலர்களை மட்டுமின்றி, நாட்டு நலனில் அக்கறை கொண்ட அத்தனை பேரையும் கவலைப்பட வைத்துள்ளது.


latest tamil news



பல்வேறு விஷயங்களில் அதிரடி நடவடிக்கைகளையும், முடிவுகளையும் எடுக்கும் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும், தேர்தல் தொடர்பான இரண்டு முக்கியமான விஷயங்களில் பின்வாங்குவது ஏன் என்று தெரியவில்லை.

தற்போது இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதன் வாயிலாக, பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும் என நம்பலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
16-ஆக-202219:28:31 IST Report Abuse
r.sundaram முயற்ச்சித்தால் ஆகாதது ஒன்றும் இல்லை. நிச்சயம் இலவசங்களை கொடுப்பதை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதற்குள்ளாக முனைப்பு மாநில, மத்திய அரசுகளிடமும், அரசியல் கட்சிகளிடமும் இல்லை. அவர்களில் முனைப்பு எப்படி மக்களை மயக்கி ஒட்டு வாங்கலாம் என்பதில் மட்டுமே உள்ளது. நேர்மையான எண்கள் ஆட்சி என்று எந்த கட்சியினராவது சொல்ல முடியுமா? ஆதார் கார்டுகளையம் ஒட்டர் லிஸ்டையும் இணைக்க வேண்டும். இதை வைத்து ஓட்டுபோடாதவர்களை அடையாளம் காண முடியும். அதன்பின் அவர்களது ஆதார் கார்டுகளை கேன்சல் செய்ய வேண்டும். அவர்களால் ரயில் பயணம் செய்ய கூட முடியாது என்ற நிலையை கொண்டுவர வேண்டும். இலவசங்களை ஆதார் என்னுடன் இணைக்க வேண்டும். இலவசம் பெற்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்று கொண்டுவர வேண்டும். அப்போது யாரும் இலவசங்களை வாங்க மாட்டார்கள். அப்படி வாங்கினால் அரசின் ரேஷன் சுமை குறையும். முயன்றால் முடியாதது பின்றும் இல்லை. ஆனால் நாம் அதில் முனைப்பு காட்டுவதில்லை என்பதுதான் சோகம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16-ஆக-202217:11:28 IST Report Abuse
Ramesh Sargam தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றுவதை தவிர்க்கபட வேண்டும். மேலும், தேரிகளுக்கு முன்பு அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை, அவர்கள் ஆட்சி அமைத்து ஒரு சில மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், அந்த ஆட்சி கலைக்கப்படவேண்டும். மேலும், கடைசி நேரத்தில், தங்களுடைய சொந்த ஆதாரத்துக்காக 'கட்சி தாவும்' (ஆம் நான் அந்த பீகார் நிதிஷ் குமாரைத்தான் குறிப்பிடுகிறேன்) அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிடமுடியாதபடி சட்டம் ஒன்று உருவாக்கப்பவேண்டும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-ஆக-202216:39:24 IST Report Abuse
sankaseshan பொது அறிவு வளர்ந்தாதாம் இலவச TV யால் ஆமாம் பிறரை ஏமாற்றுவது அரசு நிலங்களை ஆட்டையை போடுவது போன்ற அறிவு வளர்ந்திருக்கு காலமகல் கண்திறப்பாள் சின்னய்யா நாம் கவலைப்பட்டு என்ன அய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X