சல்மான் ருஷ்டியை தாக்கவில்லை: ஈரான் அரசு திட்டவட்டம்

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
துபாய் : 'எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில், ஈரான் அரசுக்கு தொடர்பு இல்லை' என, அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 75, 'தி சட்டானிக் வெர்சஸ்' என்ற நாவலை, 1988ல் வெளியிட்டார். இதற்கு, முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ருஷ்டியை படுகொலை செய்ய வேண்டும் என, அப்போதைய ஈரான் அதிபர் அயதுல்லா கோமேனி
Salman Rushdie, Iran, terrorist assault, The Satanic Verses, fatwa

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

துபாய் : 'எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில், ஈரான் அரசுக்கு தொடர்பு இல்லை' என, அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 75, 'தி சட்டானிக் வெர்சஸ்' என்ற நாவலை, 1988ல் வெளியிட்டார். இதற்கு, முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ருஷ்டியை படுகொலை செய்ய வேண்டும் என, அப்போதைய ஈரான் அதிபர் அயதுல்லா கோமேனி பகிரங்கமாக அறிவித்தார். ருஷ்டியை படுகொலை செய்ய நடந்த பல்வேறு முயற்சிகளில், அவர் உயிர் தப்பினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்துள்ள ருஷ்டி, இரு நாடுகளிலும், மாறி மாறி வசித்து வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, மேடை ஏறிய நபர், சல்மான் ருஷ்டியை கத்தியால் பலமுறை குத்தினார். இதில், ருஷ்டியின் கழுத்து, வயிறு மற்றும் கையில் படுகாயங்கள் ஏற்பட்டன.


latest tamil newsஉடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கத்திக் குத்தில், அவரது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கண் மற்றும் கையில் நரம்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ''சல்மான் ருஷ்டி மீது நடந்த தாக்குதலுக்கும் ஈரான் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,'' என, ஈரான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.B.RAM - bangalore,இந்தியா
16-ஆக-202214:36:27 IST Report Abuse
V.B.RAM இப்பவாவது புரியுதா தமிழகம் அமைதி பூங்கா என்று. இங்கு கோவில் அசிங்கம் என்று சொல்லிவிட்டு கூட, நிம்மதியாக வாழலாம். அதன் பேருதான் கருத்து சுதந்திரம் என்பது. ஆனால் கனல் கண்ணன் விஷயம் வேறு.
Rate this:
Cancel
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
16-ஆக-202210:10:16 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு கூறியிருப்பது நகைக்கவே தோன்றுகிறது. தாக்குதல் நடத்தியவனை ஈரானிய பத்திரிகைகள் ஹீரோவாக சித்தரித்து செய்திகள் போட்டபோது இவர் அதற்கு தடையேதும் சொல்லாமல் எங்கு சென்றிருந்தாராம்? வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அயதுல்லா கோமேனியின் அந்த அறிவிப்பை அரசு சார்பில் இப்போதாவது வாபஸ் பெறலாமே.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
16-ஆக-202204:52:27 IST Report Abuse
Srivilliputtur S Ramesh சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு இந்தியாவில் உள்ள "லிபரல்கள்" "இடது சாரிகள்" "சிந்தனையாளர்கள்" "மதச்சார்பின்மைவாதிகள்" என்று ஒருவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் ? "அமைதி மார்க்கத்தாரைக்கண்டு பயமா ?" முதுகெலும்பு இல்லாத கூட்டம் இது.
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
16-ஆக-202207:22:20 IST Report Abuse
Dharmavaanஅதுதான் பச்சோந்திகள் மத சார்பின்மை...
Rate this:
பேசும் தமிழன்அவர்களது பொய் முகம் வெளியே வந்து விட்டது.... அவர்கள் எப்போதுமே ஒரு சார்பாக மட்டுமெ கருத்து சொல்வார்கள்... எல்லோருமே திருடர்கள் தான்...
Rate this:
பேசும் தமிழன்அவர்களது பொய் முகம் வெளியே வந்து விட்டது.... அவர்கள் எப்போதுமே ஒரு சார்பாக மட்டுமெ கருத்து சொல்வார்கள்... எல்லோருமே திருடர்கள் தான்...
Rate this:
பேசும் தமிழன்அவர்களது பொய் முகம் வெளியே வந்து விட்டது.... அவர்கள் எப்போதுமே ஒரு சார்பாக மட்டுமெ கருத்து சொல்வார்கள்... எல்லோருமே திருடர்கள் தான்...
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
16-ஆக-202216:14:27 IST Report Abuse
தமிழ்வேள்அவர்கள் ஹிந்து தோல் போர்த்திக்கொண்டு திரியும் இஸ்லாமியர் அடிப்படைவாதிகள் ..அதனால் வாய் திறக்கமாட்டார்கள் .....ஈரோட்டு சிறுநீர் தொட்டி மீதுமட்டும் பாசம் பொத்துக்கொண்டு வரும் .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X