நேதாஜி அஸ்தியை இந்தியா எடுத்துவர கோரிக்கை

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி : ''நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அவரது மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.நேதாஜியின் மரணம் குறித்து தற்போது வரை பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1945 ஆகஸ்ட் 18ல் தைவானில் நடந்த விமான விபத்தில், நேதாஜி இறந்தார் என்று நம்பப்பட்டாலும், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே
DNA test, Netaji, Anita Bose, Subhash Chandra Bose

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : ''நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அவரது மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.

நேதாஜியின் மரணம் குறித்து தற்போது வரை பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1945 ஆகஸ்ட் 18ல் தைவானில் நடந்த விமான விபத்தில், நேதாஜி இறந்தார் என்று நம்பப்பட்டாலும், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில், அவரது ஒரே மகளான அனிதா போஸ், டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவந்து மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அப்போது தான், ''என் தந்தையின் மரணம் குறித்து இன்னும் சந்தேகம் உள்ளவர்களுக்கு, உண்மையான விபரம் தெரிய வரும்,'' என்றார்.


latest tamil newsஇது தொடர்பாக, அனிதா போஸ் மேலும் கூறியதாவது: என் தந்தைக்கு நம் நாட்டின் சுதந்திரத்தை விட அவரது வாழ்க்கையில் எதுவும் முக்கியமாக இருந்ததில்லை. அன்னிய ஆட்சி இல்லாத இந்தியாவில் வாழ அவர் ஏங்கினார். ஆனால், சுதந்திரத்தின் மகிழ்ச்சியை அவரால் அனுபவிக்க முடியவில்லை.அதனால், குறைந்தபட்சம் அவரது அஸ்தியையாவது இந்திய மண்ணுக்கு எடுத்து வர வேண்டிய நேரம் இது.

அவரது அஸ்தியை தர ரென்கோஜி கோவில் நிர்வாகமும், ஜப்பானிய அரசும் ஒப்புக் கொண்டுள்ளன. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு, உடனடியாக நல்ல முடிவெடுத்து, அவரது அஸ்தியை எடுத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
16-ஆக-202217:11:01 IST Report Abuse
Velumani K. Sundaram விரைவில் நேதாஜி அவர்களின் அஸ்தியை கொண்டுவரவேண்டும். ஒரு துளியை நம் மெட்ராஸ் மெரீனாவில் கரைப்போம்...
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
16-ஆக-202216:16:30 IST Report Abuse
Kalyan Singapore அகிம்சை சுதந்திரம் வாங்கித்தந்தது என்றும் நம்புவர்களுக்கு . இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு அமெரிக்கா உதவ வைத்த நிபந்தனை எல்லா குடியேற்ற நாடுகளுக்கும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பது தான் . நோக்கம் ? அமெரிக்காவின் petrol Diesel விற்க மிக்க ஜனத்தொகை இருந்த நாடுகள் குடியேற்ற நாடுகளே . 1948 ல் கட்டுமானம் துவங்கி 1952 ல் இயக்கம் துவங்கிய ESSO சுத்தீகரிப்பு தொழிற்சாலையே இதற்கு சான்று . இலங்கை மலேஷியா போன்ற மற்ற கொடியேற்ற நாடுகளுக்கு சுதந்திரம் காந்தி மூலமாக கிடைத்ததா ? இல்லையே ?
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
16-ஆக-202211:42:47 IST Report Abuse
velan அகிம்சை அமைதி அறவழி போராட்டம் மட்டுமே உண்மை வெற்றியை கொண்டு வந்தது அடுத்த நாட்டினை அபகரித்த ஆங்கிலேயருக்கு மனம் வலிக்க ஆரம்பித்தது அகிம்சையால்தான். நாடு எங்கு செல்கிறது? நல்லது செய்தாலும் ஏசும் என்பார்கள் அதுவே இங்கு நடக்கிறது.. கடைசி வரை ஒற்றுமை இல்லாமல் இந்தியா வளர்கின்ற நாடு அதாவது இன்னும் வளராத நாடாகவே மிளிர்கின்றது உலக அரங்கில்.. அமெரிக்கா முதல் ஜப்பான் வரை சென்றுள்ளேன் . பல நாடுகள் வளர்ந்து விட்டன .. நாம் இன்னும் அப்படியே பிரிவினை அரசியலில் வெந்து கொண்டு உள்ளோம் .. இவனுக்கு அவன் சரி அவனுக்கு இவன் சரி இப்படியே காலம் மட்டும் போவுது வளர்ச்சி இல்லை.. இன்னும் எனது வீட்டின் முன் ரோடு இல்லை சந்து சந்தாகவே உள்ளது பண வீக்கம் ஏறிக்கொண்டே உள்ளது .. அமெரிக்காவில் 2009 இல் நான் சென்ற பொது ஸ்டார் பாக்சில் காபி குடித்தேன் விலை $1.85 அதே காபியை 2015 இல் குடித்தேன் விலையில் மாற்றம் இல்லை ... அங்கு சேமிப்பு அல்லது டெபாசிட் இற்கு வட்டி இல்லை கடனுக்கெல்லாம் மிக குறைந்த வட்டி ... இந்த நிலை வரும் வரை நாடு வளர்வது கடினம் .. இன்னும் காலையில் எழுந்து பயன் படுத்தும் பேஸ்ட், குளிக்கும் சோப்பு, ஷாம்பு செல்லும் வண்டி , கார், பேசும் கைபேசி, பயன்படுத்தும் வாஷிங் மெஷின் , பார்க்கும் தொலைக்காட்சி, தினமலரை பார்க்கும் இன்டர்நெட், இதில் எதிலுமே இந்திய தயாரிப்பு இல்லை என்பதை கூட அறிய முடியாத அறிவிலியாய் ... வெந்த சோறு விதி வந்தா சாவு என்ற நிலையில் தான் நமது வாழ்க்கை சென்று கொண்டு உள்ளது ..
Rate this:
16-ஆக-202217:10:11 IST Report Abuse
ஆரூர் ரங்அமெரிக்காவில் பணவீக்கமேயில்லை என்பதெல்லாம் அந்த காலம். இப்போது ஒன்பது சதவீதத்தைத் தாண்டி மக்களை😪😪 அழ வைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதுமே இதே நிலைதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X