இல்லம் தோறும் மூவர்ணக் கொடி; பிரபலங்கள் வீடுகளில் கொண்டாட்டம்

Added : ஆக 16, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சுதந்திர தினத்தையொட்டி நீதிபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரபலங்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நேற்று மரியாதை செலுத்தினர். நாட்டின் 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், டில்லி இந்தியா கேட் பகுதிக்கு அருகில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்ன நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் துாவி மரியாதை
Independence Day, India, National Flag, Ministers, Congress, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சுதந்திர தினத்தையொட்டி நீதிபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரபலங்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நேற்று மரியாதை செலுத்தினர்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், டில்லி இந்தியா கேட் பகுதிக்கு அருகில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்ன நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.


மரியாதை


அப்போது ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சவுத்ரி ஆகியோர் உடன் இருந்தனர். டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.

டில்லியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தனர்.


latest tamil news


காங்., இடைக்கால தலைவர் சோனியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் இருப்பதால், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து கொடியேற்றி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.அவருக்கு பதிலாக, மூத்த தலைவர் அம்பிகா சோனி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின், குலாம்நபி ஆசாத், ராகுல், பிரியங்கா, ஆனந்த் சர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


சோனியா கண்டனம்


'காந்தி ஸ்மிரிதி' என அழைக்கப்படும் பிர்லா மந்திரில் உள்ள காந்தி உயிர் நீத்த இடத்திற்கு அனைவரும் சென்றனர். ரத்தத்துளிகளுடன் காந்தியின் உடல் சாய்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் மீது மலர்களை துாவி மரியாதை செலுத்தினர்.

காங்., - எம்.பி., ராகுல் வெளியிட்ட செய்தியில், 'சுதந்திரம் அடைந்து 76வது ஆண்டிற்குள் புதிய உத்வேகத்துடன், ஒற்றுமையுடன் நாம் நுழைகிறோம். 'நாட்டு நலன் சார்ந்த பணிகளுக்கு புதிய திசையையும், வேகத்தையும் நாம் அளிப்போம்' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, நாட்டின் பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறைக்கு அப்போதைய காங்., தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டி, பா.ஜ., வெளியிட்ட வீடியோவுக்கு காங்., தலைவர் சோனியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக சுதந்திர போராட்ட தியாகிகளை அற்பமாக கருதும் அரசுக்கு எதிராக காங்., தொடர்ந்து போராட்டம் நடத்தும்,'' என்றார்.

ஒரு லட்சம் வழக்கு வாபஸ்

வட கிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் சர்மா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:விசாரணை நீதிமன்றங்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்து தெரிவித்தது உள்ளிட்ட சிறு குற்றங்களில் ஈடுபட்டோர் மீதான ஒரு லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.மம்தாவின் கனவு

சுதந்திர தினத்தையொட்டி மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில் பசியுடன் யாரும் இருக்கக் கூடாது, பசியில்லாத நாட்டை கட்டியெழுப்புவது தான் என் கனவு. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பேச்சே இருக்கக் கூடாது. அனைவரும் கல்வி கற்க வேண்டும். அனைத்து தரப்பினரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-202209:12:04 IST Report Abuse
அப்புசாமி முதல் குடிமகள் கொடியேத்தவே இல்லையே? அவர் பின்னாடி ஏதோ கருப்பு சிவப்பு கொடி மாதிரி இருக்கு. ஓ, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லையோ?
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
16-ஆக-202209:52:20 IST Report Abuse
MANI DELHIயார் எப்போது கொடியேற்றுவார்கள் என்று தெரியாத அளவிற்கு மூளைச்சலவை செய்து அறிவிலிகளாக நாம் இருக்கும்போது காமாலை கண்களால் தான் அனைத்தும் தெரியும்....
Rate this:
Venkat - Chennai,இந்தியா
16-ஆக-202216:16:50 IST Report Abuse
Venkatமுரசொலி மட்டும் படித்தல் அப்படிதான்...
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
16-ஆக-202208:18:03 IST Report Abuse
Visu Iyer முன்பெல்லாம் சினிமா திரையங்குகளில் படம் முடிந்தவுடன் தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் பாடும்... மோடி வந்து தான் தேசிய உணர்வை செய்தார் என்று யாரும் பெருமை கொள்ள தேவையில்லை.. இது முன்பே இந்திய மக்களீடம் உள்ளது.. தேச பற்றை தேச பற்றாக கொள்ள வேண்டுமே தவிர ஒரு கட்சி பற்றாக எப்போதும் கொள்ள கூடாது. நினைவில் வையுங்கள்.
Rate this:
16-ஆக-202212:05:11 IST Report Abuse
Karmegam,Sathamangalamவிசு சரக்கு விற்பனை செய்திக்கு போய் பாரு ஒன்னைய நல்லா கிழிச்சு விட்ருக்கானுக.😜...
Rate this:
Cancel
16-ஆக-202206:54:28 IST Report Abuse
Tapas Vyas எல்லாமே அதிக பணத்தை தவறான வழியில சேத்தவனுகளா இருப்பானுக- ஏன். தேசியக் கொடியை வீட்டில் ஏற்றாதவற்க்கு தேசப்பற்றில்லையென்று கூற முடியுமா?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
16-ஆக-202208:55:02 IST Report Abuse
Visu Iyerதேசியக் கொடியை வீட்டில் ஏற்றாதவற்க்கு தேசப்பற்றில்லையென்று கூற முடியுமா?///வீட்டு வாசலில் தான் பறக்க விட வேண்டுமா என்ன.. என கேட்கிறீர்கள் புரிகிறது .... சிலர் நெஞ்சில் ஏற்றி இருப்பார்கள் ...உண்மை தான்....
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
16-ஆக-202209:49:23 IST Report Abuse
MANI DELHIஎன்னசெய்யறது மிட்டாய் கலாசார சுதந்திர தின கொண்டாட்டத்தை விட்டு வெளியில் வரமுடியாத பேச்சுகள் இப்படி தான் இருக்கும். என்ன செய்வது. மூளைச்சலவை அப்படி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X