இன்று முதல் 3 நாள் கன மழை பெய்யும்

Updated : ஆக 16, 2022 | Added : ஆக 16, 2022 | |
Advertisement
சென்னை : 'வளி மண்டல சுழற்சி காரணமாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, சில மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழையும்; சில இடங்களில் கன மழையும் பெய்யும்.நீலகிரி, கோவை,
Rain, மழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'வளி மண்டல சுழற்சி காரணமாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, சில மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழையும்; சில இடங்களில் கன மழையும் பெய்யும்.நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்.


latest tamil news



நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும். அதேபோல், நீலகிரி, கோவை, கடலுார், அரியலுார், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், நாளை மறுநாள் கன மழை பெய்யும். சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த, 24 மணி நேரத்தில் எந்த இடத்திலும் மழை பெய்யவில்லை. குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய, தமிழக தெற்கு கடலோர பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு வரும், 18ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X